சென்னையில் வெளுத்து வாங்குது மழை... இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்!

இந்த மழை இன்னும் இரு தினங்களுக்குத் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் இலங்கைக்கு வெகு தொலைவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நேற்றும் இன்றும் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது வலுவடைந்து ஆந்திராவையொட்டி உள்ள வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் ஓரளவு கனமாக பெய்ய ஆரம்பித்த மழை, விடிகாலையில் பேய் மழையாக மாறியது.
சென்னை உள்ளிட்ட பெரும்பாலான கடலோரப் பகுதி நகரங்களில் நல்ல மழை பெய்தது.
தரைக்காற்றும் பலமாக வீச ஆரம்பித்துள்ளது. இன்னும் இரு தினங்களுக்கு இந்த நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காலையில் மட்டுமே தொடர்ந்து 3 மணி நேரம் மழை கொட்டியது. இந்த சீஸன் பனியும் குளிருமாகப் போய்விடுமோ.. குடிநீருக்கு என்ன செய்யப் போகிறோம் என்று தவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு இந்த மழை பெரும் ஆறுதலைத் தந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications