திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்பட 6 எஸ்.பிகள் டிரான்ஸ்பர்
சென்னை: திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் உள்பட 6 எஸ்.பிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ராஜகோபால் பிறப்பித்துள்ள உத்தரவில்,
பயிற்சி முடித்து விட்டு காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி காளிராஜ் மகேஸ்குமார், திருவாரூர் மாவட்ட எஸ்பியாகவும், திருவாரூர் மாவட்ட போலீஸ் எஸ்பி எஸ்.சேவியர் தனராஜ் காஞ்சீபுரம் மாவட்ட எஸ்பியாகவும், காஞ்சீபுரம் மாவட்ட எஸ்பி எஸ்.மனோகரன் விழுப்புரம் மாவட்ட எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட எஸ்பி என்.பாஸ்கரன், மாநில மனித உரிமை கமிஷன் எஸ்பியாகவும், ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் (National Investigation Agency) எஸ்பி பணியாற்றிய வந்த எஸ்.மணி, சென்னையிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பி பி.ஆர்.வெண்மதி டி.ஜி.பி. அலுவலக உதவி ஐ.ஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பில் எஸ்பி பணியாற்றிய வந்த எஸ்.மணியை தமிழக அரசு கட்டாயக் காத்திருப்பில் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் இந்த அமைப்பை மத்திய அரசு உருவாக்கியது. இதை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தது முன்னாள் உள்துறை அமைச்சரும் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பில் பணியாற்றுவிட்டு வந்த மணியைத் தான் கட்டாயக் காத்திருப்பில் தமிழக அரசு வைத்திருந்தது.
காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த சில தொடர் அரசியல் கொலைகளையடுத்து அந்த மாவட்ட எஸ்பி மனோகரனை விழுப்புரத்துக்கு மாற்றியுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications