கேரளா: 10-ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு திருவனந்தபுரம் கோர்ட் தூக்கு தண்டனை!

கேரளாவின் வெஞ்சரமூடு அருகே உள்ள வட்டப்பார பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரன் நாயர் மற்றும் ஜெயகுமாரி தம்பதியினரின் மகள் ஆர்யா 10-ம் வகுப்பு படிந்து வந்தார். கடந்த மார்ச் 6-ந் தேதி ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த ஆர்யாவிடம் ஸ்க்ரூ ட்ரைவர் கேட்டிருக்கிறார். ஆர்யாவும் அதை எடுத்துக் கொடுத்திருக்கிறார். அப்போது ஆர்யா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததைப் பார்த்த ராஜேஷ் அப்பெண்ணை பலாத்காரம் செய்து நகைகளைத் திருடிச் சென்றுவிட்டான். வீடு திரும்பிய ஆர்யாவின் அம்மா, மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கட்டக்கடா பகுதியைச் சேர்ந்தவரான ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ்குமார்தான் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த ராஜேஷ்குமாரை மார்ச் 13-ந் தேதியன்று போலீசார் கைது செய்தனர். அவனிடமிருந்து ஆர்யாவின் நகைகளையும் மீட்டனர்.
பின்னர் 3 மாத காலவிசாரணைக்குப் பிறகு விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த நவம்பர் 8-ந் தேதி முதல் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. மொத்தம் 38 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு குற்றவாளி ராஜேஷ்குமாருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது
பாலியல் பலாத்கார குற்றத்தில் ஈடுபடுவோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் கேரள நீதிமன்றத்தின் தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications