சென்னையில் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி: நால்வர் கவலைக்கிடம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் வசித்து வந்த பசிருல்லாகான், இன்று காலை சமையல் செய்வதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்த போது, சிலிண்டர் வெடித்தது. இதன் காரணமாக, முதல் மாடியில் இருந்த அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
இதில், வீட்டின் கீழ் பகுதியில் வசித்து வந்த தேன்மொழியனும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதேபோல, பசிருல்லா கானும் உயிரிழந்தார்.
பலர் கவலைக்கிடம்
இந்த விபத்தில், பக்கத்து வீட்டில் வசித்து வந்த இலியாஸ், அவரது மனைவி ஃபரீதா, மகள் ரியானா ஆகியோரும் படுகாயமடைந்தனர். உயிரிழந்த தேன்மொழியனின் மனைவி ஜோதி, மகள் மதுமிதா, பசிருல்லாகானின் மனைவி குர்ஷிதாவும் காயம் அடைந்தனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து காஸ் கசிவு காரணமாக ஏற்பட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் கேஸ் ஏஜென்சியினரின் அலட்சியமே விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழக்க காரணமாக அமைந்துவிட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications