கற்பழிப்பு புகாரைத் திரும்பப் பெற ரூ. 50,000 பேரம் பேசிய உ.பி. பஞ்சாயத்து
அலாகாபாத்: உ.பியில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மைனர் பெண் போலீஸில் புகார் கொடுக்காமல் இருப்பதற்காக அவருக்கு ரூ. 50,000 இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பரிதாபத்துக்குரிய பெண்ணுக்கு வயது 13தான் ஆகிறது என்பதுதான் பெரும் சோகமான செய்தியாகும். பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள மாலி என்ற கிராமத்தில்தான் இந்த அக்கிரமம் நடந்துள்ளது.
அங்கு 13 வயதான சிறுமியை கடத்தி மகாராஷ்டிராவுக்கக் கொண்டு சென்று பல நாட்கள் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக குந்தா போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தியபோது, தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்தான் இந்த பாலியல் பலாத்காரத்தை நடத்தியது என்று அப்பெண் கூறினார். மேலும் தன்னை துப்பாக்கி முனையில் கடத்தி்ச சென்றதாகவும் அவர் தெரிவித்தார். நாக்பூருக்குத் தன்னைக் கொண்டு சென்று பல நாட்கள் கற்பழித்ததாகவும் அவர் கூறினார்.
முதலில் இந்தப் புகாரை எடுக்க போலீஸார் மறுத்துள்ளனர். ஆனால் எஸ்.பி.யே நேரடியாகத் தலையிட்ட பின்னர்தான் புகாரைப் பதிவு செய்துள்ளனர் போலீஸார்.
இதற்கிடையே, அப்பெண் சார்ந்த கிராமப் பஞ்சாயத்தினர், பிரச்சினையை கமுக்கமாக முடித்துக் கொள்வதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அதாவது பெண்ணின் குடும்பத்தார் மற்றும் கற்பழிப்பில் ஈடுபட்ட நபர் ஆகியோருடன் பேச்சுநடத்தி பெண் குடும்பத்தாருக்கு ரூ. 50,000 இழப்பீடு தருவதாகவும், புகாரை வாபஸ் பெறுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது. மேலும் அப்பெண் திருமண வயதை எட்டியதும், கற்பழித்த நபருக்கே கட்டி வைத்து விடலாம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இதை பெண்ணின் குடும்பத்தார் நிராகரித்து விட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications