குடியரசு தினத்தன்று தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி பிரணாபிடம் 165 பேர் மனு
டெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம் வராத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 165 பேர் வரும் 26ம் தேதி தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்குமாறு ஜனாதிபதியிடம் மனு கொடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள யவாத்மால் மாவட்டத்தைச் சேர்ந்த 165 முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக அரசிடம் இருந்து வர வேண்டிய ஓய்தியம் வரவில்லை. இதனால் அவர்கள் பசியும், பட்டினியுமாக உள்ளனர். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட அவர்கள் அனைவரும் சேர்ந்து ஜனாதிபதிக்கு ஒரு மனு எழுதி அதில் கையெழுத்துபோட்டு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மனுவில், வரும் 25ம் தேதிக்குள் தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் வரும் 26ம் தேதி தாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்ள அனுமதி அளி்ககுமாறு குறிப்பிட்டுள்ளனர்.
ஓய்வூதியம் கிடைக்காதவர்கள் கடந்த ஆண்டு பேரணி நடத்தியும் பலனில்லை. மேலும் இது குறித்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தான் பட்டினியாகக் கிடந்து இறப்பதைவிட தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications