டெல்லி பலாத்கார சம்பவம்- மாணவி மீது தவறு கண்டுபிடிக்கும் 'சாமி' அசாராம் பாபு!

'சாமி' அசாராம் பாபு மிகவும் புத்திசாலித்தனமாக பேசுவது போல் டெல்லி பலாத்கார சம்பவம் பற்றிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
"டெல்லி பலாத்கார சம்பவத்தில் வெறும் 5 அல்லது 6 பேர் மட்டுமே குற்றவாளிகள் அல்ல. பலாத்கார சம்பவத்துக்கு மாணவியும் தான் காரணம். அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய வரும் போது அவர்களை சகோதரர் என்று அழைத்து, தன்னை பலாத்காரம் செய்யாதீர்கள் என்று கெஞ்சியிருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அந்த பெண் மானத்தையும், உயிரையும் காப்பாற்றியிருக்கலாம். அவர்களும் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்று 'கருத்து' முத்தை உமிழ்ந்திருக்கிறார் சாமியார் அசாராம் பாபு!
அத்துடன் விட்டுவிடவில்லை சாமியார்!
"வரதட்சிணைக் கொடுமைகளுக்கு தண்டனை அளிப்பது போன்ற சட்டத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை அளிப்பதை எதிர்க்கிறேன்" என்றும் ஒரு "முத்தை" உதிர்த்திருக்கிறார்!!












Click it and Unblock the Notifications