சொத்துக் குவிப்பு வழக்கு: இளவரசியிடம் 211 கேள்விகள்- தெரியாது என்றே பதில்!
பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்றத்தில் இளவரசி நேற்று ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவரிடம் 211 கேள்விகள் கேட்கப்பட்டது அதில் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் தெரியாது என்றே பதிலளித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள இளவரசி நேற்று பெங்களூரு தனி நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரிடம் நீதிபதி எம்.எஸ் பாலகிருஷ்ணா, ஜெயலலிதா, சசிகலா சொத்துக்கள் வாங்கியது தொடர்பான நூறுக்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டார். அதன் விபரம் வருமாறு:
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிகவும் குறைந்த விலைக்கு நிலங்கள் வாங்கி பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பது பற்றி தெரியுமா என்று நீதிபதி கேட்டார்.
இதற்கு இளவரசி, சில சொத்துக்களைபற்றி தெரியாது என்றும், சில நிறுவனத்துக்காக வாங்கப்பட்டது என்றும், நிலங் களை நிறுவனத்தின் பெய ரில் வாங்கியிருக்கலாம் என்றும் பதில் அளித்தார்.
நீதிபதி: ஏ.எஸ். டெவலப்பருக்கு சசிகலா சொத்து வாங்கியது தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: சொத்துக்குவிப்பு தொடர்பாக அரசு அதிகாரி வாசுதேவன் என்பவர் ஜெயலலிதா வீட்டில் ஆய்வு மேற்கொண்டபோது, ரூ.3,35,55,043 மதிப்பு தங்கநகைகள் இருந்தது கண்டுபிடித்தது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கடிகாரங்களின் மதிப்பு ரூ.47,61,860 என்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் 1,116 கிலோ எடைகொண்ட வெள்ளிப்பொருட்கள் இருந்துள்ளது பற்றி தெரியுமா?
இளவரசி: தெரியாது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் ரூ.2,90,100 மதிப்பிலான 106 ஜோடி செருப்புகள் இருந்தது பற்றி தெரியுமா?
இளவரசி: அந்த செருப்புகளில் என்னுடைய செருப்புகள்தான் அதிகமாக இருந்தது.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சேலைகள் பற்றி தெரியுமா?
இளவரசி: அதிகாரிகள் கண்டுபிடித்த சேலைகளில் என்னுடைய சேலைகள் தான் அதிகமாக இருந்தது.
இளவரசியிடம் நீதிபதி 211 கேள்விகளை கேட்டு வாக்குமூலத்தை பதிவுசெய்தார். இதன் பின்னர் வழக்கை ஒத்திவைத்தார். இளவரசியிடம் வாக்குமூலம் பெறும் பணி இன்றும் தொடர்கிறது.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியான சசிகலா, மூன்றவது குற்றவாளியான வி.என்.சுதாகரன் ஆகியோர் தனி நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்!












Click it and Unblock the Notifications