கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீதான 2 வழக்குகளை ரத்து செய்து ஹைகோர்ட் உத்தரவு!

திரைப்பட விநியோகம் தொடர்பாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தம்மிடம் ரூ.6 கோடியே 75 லட்சத்தை மோசடி செய்துவிட்டார் என்பது திரைப்படத் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரத்தின் புகார்.
திரைப்பட விநியோகம் தொடர்பான விவகாரத்தில் தமக்குத் தர வேண்டிய ரூ.20 லட்சத்தைத் தராமல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்பது நரேஷ் பாபு என்பவரின் புகார்.
இப்புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை மத்தியக் குற்றப் பிரிவு போலீசார், சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த ஆர்.எம். ரமேஷ், செம்பியன் சிவகுமார், எஸ். கண்ணன் ஆகியோர் மீது 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆனால் பொய் புகார் அடிப்படையில் 2 வழக்குகளையும் நீதிமன்றம் ரத்து செய்யக் கோரி கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி ஏ. ஆறுமுகசாமி, கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து நேற்று உத்தரவிட்டார்.
இந்த 2 வழக்குகளிலும் எழுந்துள்ள விவகாரங்கள் தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில்தான் தீர்வு காண முடியும் என்றும் குற்ற வழக்கின் மூலம் இந்த விவகாரங்கள் பற்றி விசாரிக்க இயலாது என்பதால் ரத்து செய்வதாக நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications