மர்ம காய்ச்சலுக்கு சிறுவன், சிறுமி, இளம்பெண் பலி: மக்கள் பீதி
விருதுநகர்: விருதுநகர், நெல்லையில் மர்ம காய்ச்சலுக்கு 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த முருகன் மகள் சங்கரேஸ்வரி(11). அஜிஸ் நகரில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் விஷ காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கிருஷ்ணன்கோவில் தெருவைச் சேர்ந்த ரகுபாண்டியன் மகன் ராஜேஷ்(12). அவர் கடந்த ஒரு வாரமாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் பாளையங்கோட்டை அருகே உள்ள நொச்சிகுளத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் இன்று காலை இறந்தார். இந்த பகுதியில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications