தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரை ஸ்பேனரால் அடித்துக் கொன்ற 16 வயது சிறுவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாயுடன் உல்லாசமாக இருந்த உறவினரைக் கொன்ற 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து உள்ள மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(30) என்பவர் சென்னையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்டில் டிரைவராக பணியாற்றினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டெய்னர் பெட்டிகளை லாரியில் ஏற்றி மீஞ்சூரை அடுத்துள்ள வல்லூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் கொடுக்கச் சென்றவர் மாயமானார்.

இந்நிலையில் பொன்னேரி- திருவொற்றியூர் சாலையோரம் இருக்கும் வடிநீர் கால்வாயில் கிருஷ்ணமூர்த்தி பிணமாகக் கிடந்தார். அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தது. அவரது உடல் கிடந்த இடத்திற்கு அருகே அவர் ஓட்டிச் சென்ற லாரியும் நின்றது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சாலையோரம் சந்தேகப்படும்படி சுற்றிய சிறுவனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சிறுவன் விருதுநகர் மாவட்டம் அய்யனார்புரத்தைச் சேர்ந்த பிரபு(16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், கிருஷ்ணமூர்த்தியின் உறவினரான அவன் அதே லாரியில் கிளீனராக இருந்ததும் தெரிய வந்தது.

மேலும் கிருஷ்ணமூர்த்தியை கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டான். அவன் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

நான் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தேன். அடிக்கடி பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த உறவினர் கிருஷ்ணமூர்த்தி எங்கள் வீட்டிற்கு வருவார். இதனால் எனது தாய்க்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. ஒருநாள் பள்ளி முடிந்து மதியம் வீட்டிற்கு வந்த போது எனது தாயும், கிருஷ்ணமூர்த்தியும் உல்லாசமாக இருப்பதை பார்த்தேன். இதனால் எனது படிப்பை நிறுத்திவிட்டு அருகில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு எனது தாய் அனுப்பிவிட்டார்.

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கிருஷ்ணமூர்த்தி ஊருக்கு வந்தபோது அவருடனேயே என்னை வேலைக்கு அனுப்பிவிட்டனர். அவர் வேலை பார்த்த இடத்திலேயே அவருடைய லாரிக்கு கிளீனராக என்னை வேலைக்கு சேர்த்தார். தாயுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த அவரை தீர்த்துக்கட்ட சமயம் பார்த்துக் கொண்டு இருந்தேன். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு செல்வதாக அவர் தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர் தகாத உறவில் ஈடுபடுவார் என்று நினைத்து கொலை செய்ய திட்டமிட்டேன்.

திங்கட்கிழமை தனியார் கம்பெனிக்கு கண்டெய்னர் பெட்டிகளை கிருஷ்ணமூர்த்தி லாரியில் கொண்டு சென்றார். கிளீனராக நான் இருந்தேன். சரக்குகளை இறக்கிவிட்டு இரவு திரும்பி வரும்போது வழியில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கினோம். நான் எழுந்து பார்த்த போது அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

உடனே அருகில் இருந்த பெரிய ஸ்பேனரை எடுத்து கிருஷ்ணமூர்த்தி தலையில் அடித்தேன். சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். அவரது உடலை இழுத்து அருகில் உள்ள கால்வாயில் தள்ளி விட்டு ஓடிவிட்டேன். வழி தெரியாமல் அந்த பகுதியிலேயே சுற்றி வந்தேன். போலீசார் என்னை கைது செய்துவிட்டனர் என்று அவன் அதில் தெரிவித்துள்ளான்.

இது தவிர அவன் தான் எப்படி கொலை செய்தேன் என்பதை நடித்தும் காட்டியுள்ளான். அதை போலீசார் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+