போதையில் சிக்கியுள்ள தமிழகம் மீளும்... வைகோ பொங்கல் வாழ்த்து
சென்னை: மதுவின் போதையிலும், இலவசத்தின் போதையிலும் சிக்கியுள்ள தமிழகம் அதிலிருந்து மீண்டு பெருமையை நிலைநாட்டும் காலம் மலரும் என்று வைகோ வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துக்களில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:
உயிர்களை வாழ வைக்கும் உணவுத் தானியங்களைத் தன் மேனி சிந்திய வியர்வைத் துளிகளால் விளைவித்துத் தரும் வேளாண் பெருங்குடி மக்கள், தாம் தாயாகப் போற்றும் நிலத்துக்கும், கால்நடைச் செல்வங்கட்கும், நன்றி காட்டும் உன்னதப் பெருவிழாதான் தைப்பொங்கல் திருவிழா ஆகும்.
தித்திக்கும் தேனாக, கரும்பு தந்த சர்க்கரையும், செழித்த கழனி தந்த நெல்மணிகளின் அரிசியும், நறுபசுவின் நன்நெய்யும் கொண்டு, புதுப் பானையில் பொங்கி எடுத்த சர்க்கரைப் பொங்கலை உழவன், தன் இல்லத்தாரோடு பகிர்ந்து உண்டு, பொங்கலோ பொங்கல் என்று குதூகலித்துக் கொண்டாடும் திருநாள் அன்றோ தைப் பொங்கல் நன்னாள்.
தமிழ்நாட்டில் கொண்டல்கள் மழை தர மறுத்ததாலும், இயற்கையின் மடியை நாசப்படுத்தும் மனிதனின் அக்கிரமச் செயலால் மணற் பாங்குகள் சூறையிடப்பட்டு, நிலத்தடி நீர் வறண்டே போனதாலும், பயிர்கள் பருகும் பாலான தண்ணீர் அற்றுப் போனதாலும், விவசாயிகள் துன்பத்தில் துவண்டு, களிப்புடன் பொங்கலைக் கொண்டாட முடியாத அவலம் இங்கே. பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கும் வயல்கள், வறண்டு போன வாவி, குளங்கள்; கால்நடைகளுக்கும் குடிக்க நீர் இல்லாத துயர நிலை.
தலைமுறை தலைமுறையாக, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தமிழர்கள் கொண்டாடி வரும் பொங்கல் நாளில், காரிருளுக்குப் பின்னர் வெளிச்சம் உதிக்கும் என்ற நியதியின்படி, தை பிறந்து விட்டது; இனியாவது நமக்கு ஒரு வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு பெற்றோரை, கரம்பற்றிய மனையாளை, வளரும் பிள்ளைச் செல்வங்களை உவகையுடன் ஊக்குவிக்கத் தமிழ்ப் பெருமக்கள் இல்லத்தில் இப்பொங்கலைக் கொண்டாட்டும்.
தரணி வாழ் தமிழர்களது உள்ளத்தில், எரியும் தணல் அணைய எதிர்காலத்தில் சுதந்திரத் தமிழ் ஈழ விடியல் பிறக்கட்டும். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications