பாக்.-ன் தாக்குதலுக்கு பதில் தாக்குதல்: எல்லை தளபதிகளுக்கு ராணுவ தலைமை தளபதி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

Bikram Singh
டெல்லி: பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ஆத்திரமூட்டும் வகையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை மேற்கொண்டால் பதிலுக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அப்பகுதி ராணுவ தளபதிகளுக்கு தலைமை தளபதி பிக்ரம்சிங் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..

இது தொடர்பாக அவர் கூறுகையில், எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருக்கும் தளபதிகள் அனைவரும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கின்றனர். ஆத்திரமூட்டும் பாகிஸ்தானின் செயலுக்கு பதில் தாக்குதலே பாதுகாப்பானது எனக் கருதுகின்றனர். அவர்களிடம் இருந்து வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

இந்திய வீரர்கள் 2 பேரை பாகிஸ்தான் கொன்றது கொடூரமானது. பாகிஸ்தான் சொல்வது போல 6-ந் தேதி நாம் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை. ஆனா பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டே நமது இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

சரியான நேரத்தில் சரியான இடத்தில் பதிலடி கொடுக்க இந்தியாவுக்கும் உரிமை உண்டு. பாகிஸ்தானின் நடவடிக்கை மன்னிக்க முடியாது என்றும் இது போர் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட ஹேமராஜின் தலையை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+