ஜம்மு காஷ்மீரில் தொடர் தாக்குதல்: 100க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் ராஜினாமா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் துப்பாக்கி முனை பஞ்சாயத்து தலைவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. தங்களது தீவிரவாத சித்தாந்தத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அம்மாநில அரசு வெற்றிகரமாக உள்ளாட்சித் தேர்தலை நடத்திவிட்டதே என்பதன் காரணமாகவே தீவிரவாதிகள் அச்சுறுத்தலை மேற்கொண்டு வருகின்றனர். ஜூனா பேகம் என்ற பெண் பஞ்சாயத்து தலைவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம்தான் இப்பொழுது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தங்களுக்கு உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் பஞ்சாயத்து தலைவர்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தனர். இந்த எண்ணிக்கை திங்கள்கிழமையன்று எண்ணிக்கை 100ஐத் தாண்டியது. ராஜினாமா செய்துள்ள பஞ்சாயத்து தலைவர்கள் தங்களின் இந்த முடிவிற்காக மக்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளனர்.
ஆனால் மாநில அரசோ அண்மையில்தான் பஞ்சாயத்து தலைவர்களின் பாதுகாப்பை ரத்து செய்திருந்தது. இதனால் உயிராபத்து அச்சத்தில் கதிகலங்கிக் கிடக்கின்றனர் ஜம்மு காஷ்மீர் மாநில பஞ்சாயத்து தலைவர்கள்.












Click it and Unblock the Notifications