வறட்சி... சாதிக் கலவரம்: பொங்கலை புறக்கணித்த 'காவிரி' விவசாயிகள், தர்மபுரி தலித் கிராம மக்கள்
தஞ்சாவூர்: பொய்த்துப்போன சாகுபடி... வறண்டு போன நீர் நிலைகள்... ஆடுமாடுகளுக்குக் கூட தீவனம் தரமுடியாத நிலையால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை புறக்கணித்துள்ளனர் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சில கிராம விவசாயிகள்.
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 50 தலித் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். குடும்பத்தலைவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் எங்களுக்கு என்ன பொங்கல் பண்டிகை என்று நினைத்து வெதும்பிய பெண்கள் இந்த கொண்டாட்டத்தை தவிர்த்துவிட்டனர்.
மனதில் சந்தோசம் இருந்தால் மட்டுமே பண்டிகையும், கொண்டாட்டமும். ஆனால் பயிர்கள் கருகியதால் ஒருபுறம் மருகி நிற்கும் விவசாயிகளும், குடியிருப்புகளும், பொருளாதாரமும் கருகியதால் தலித் கிராம மக்கள் மறுபுறமும் பொங்கல் பண்டிகையை புறக்கணித்துள்ளனர்.

டெல்டா மாவட்டத்தில் உற்சாகமில்லை
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் ஆண்டுதோறும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி இல்லை. சம்பா சாகுபடியும் பல இடங்களில் கருகிவிட்டது. இதனால் களை இழந்துவிட்டது பொங்கல். டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கலை புறக்கணித்துள்ளனர்.

துக்கம் அனுஷ்டித்த விவசாயிகள்
பருவ மழை பொய்த்தப்போனது ஒருபுறம், காவிரி நீர் பிரச்சனை மறுபுறம் என விவசாயிகளை வாட்டியதோடு பயிர்செய்த நெற்பயிர்களும் கருகியதால் விவசாயிகள் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது துக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொய்த்துப்போன சாகுபடி
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் சாகுபடி பொய்த்துப்போனது. இதனால் விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கலைப் புறக்கணித்துள்ளனர். பருவமழை பொய்த்துப்போனதால் கடும் வறட்சி நிலவுகிறது. 3மணிநேரம் மட்டுமே மின்சாரம் கிடைப்பதால் விவசாயம் முற்றிலும் பொய்த்துப்போனது என்கின்றனர் விவசாயிகள். இடுபொருள்விலை உயர்வு, கூலிஉயர்வு போன்றவற்றினாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

கறுப்புக்கொடி ஏற்றிய விவசாயிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் விளையும் நெல்லில் இருந்துதான் அரிசி எடுத்து பொங்கல் வைப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்த பாரம்பரியம் கைவிடப்பட்டுள்ளது. எனவே புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி மாவட்டத்தை அறிவிக்க கோரி விவசாயிகள் பொங்கலை புறக்கணித்துள்ளனர்.
சில விவசாயிகள் வீட்டிலும், விளைநிலங்களிலும் கருப்புக்கொடியேற்றி பொங்கல் கொண்டாடத்தை புறக்கணித்துள்ளனர்.

கலவர பாதிப்பு கிராமங்களில்…
இதேபோல் தர்மபுரி மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கறுப்புக் கொடி ஏற்றியும், பெண்கள் கறுப்பு சேலை அணிந்தும் பொங்கலை புறக்கணித்தனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 7ம் தேதி காதல் திருமணத்தால் இருவேறு பிரிவினரிடையே பிரச்சினை உருவானது. இதில் நத்தம் காலனி, அண்ணா நகர் உள்ளிட்ட கிராமங்களில் 300 வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன.

கறுப்பு சேலை அணிந்த பெண்கள்
இந்த கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 50 தலித் கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் கடந்த 2 மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் இல்லாத காரணத்தினால் கிராமங்களில் உள்ள பெண்கள் கறுப்புச் சேலை அணிந்துள்ளனர். வீடுகளிலும் தெருவின் முக்கிய இடங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றி பொங்கலை புறக்கணித்துள்ளனர். பொங்கல் பண்டிகை முடியும் வரை கறுப்புக் கொடியை இறக்கப்போவதில்லை என்று தலித் கிராமப் பெண்கள் அறிவித்துள்ளனர்.

கறுப்புச் சட்டியில் பொங்கல்
இது ஒரு புறம் இருக்க புதுப்பானையில் பொங்கல் வைப்பதற்கு பதிலாக இந்த ஆண்டு தங்களுக்கு கறுப்பு பொங்கலாக மாறிவிட்டது என்பதை உணர்த்தும் வகையில் சில கிராமங்களில் கறுப்புச் சட்டியில் பொங்கல் வைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர் விவசாயிகள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications