விரைவில் திமுக ஆட்சி அமைந்து தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க உறுதி ஏற்போம்: கனிமொழி

திருவல்லிக்கேணி 95வது வட்ட திமுக சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோடு வி.எம். தெருவில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. இதில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு 500 பேருக்கு பொங்கல் செய்யத் தேவையான அரிசி, வெல்லம், நெய், முந்திரி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகள் மற்றும் 500 பெண்களுக்கு சேலைகள், 300 இளைஞர்களுக்கு பேண்ட்-சட்டைகள் வழங்கினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது,
திமுக ஆட்சியில் தாய் வீட்டு சீதனம் போன்று தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு பொங்கல் பரிசுகளை கருணாநிதி வழங்கினார். தற்போது தமிழகத்தில் மின்சாரம் எப்போது வரும், போகும் என்பது தெரியாமலும், குழந்தைகள் படிக்க முடியாமலும், பெண்கள் சமைக்கக் கூட முடியாத அளவுக்கு கடும் மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியாமல் உள்ளது.
ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்கு செல்ல பயமாக உள்ளது. அந்த அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது. பேருந்து. பால், மின் கட்டணம் ஆகியவற்றின் உயர்வால் தமிழகத்தில் விலைவாசி எப்படி உயர்ந்துள்ளது என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதனால் பொங்கல் பண்டிகை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு விரைவில் திமுக ஆட்சி அமைந்து தமிழகத்திற்கு விடிவு காலம் பிறக்க நாம் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.
-
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications