கலாநிதி மாறனின் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் கத்தார் ஏர்வேஸ்!

Subscribe to Oneindia Tamil

Spicejet
சென்னை: சன் டிவி அதிபர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருவதாகத் தெரிகிறது. இந்தச் செய்தியால் பங்குச் சந்தையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகளின் விலை 6 சதவீதம் வரை திடீரென உயர்ந்தது.

விமானத்துறையில் அன்னிய முதலீடுகளை மத்திய அரசு சமீபத்தில் அனுமதித்தது. இதையடுத்து முடங்கிக் கிடக்கும் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன பங்குகளை எடிகாட் விமான நிறுவனம் வாங்கப் போவதாக செய்தி கிளம்பியது. கடைசியில் அது புஸ்ஸானது.

இந் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் எடிகாட் விமான நிறுவனம் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே ஸ்பைஸ் ஜெட் பங்குகளை வாங்க கத்தார் ஏர்வேஸ் ஆர்வம் காட்டியுள்ளது. கத்தார் ஏர்வேஸ் தவிர மேலும் சில விமான நிறுவனங்களுடனும் முதலீட்டாளர்களுடனும் ஸ்பைஸ் ஜெட் நிர்வாகம் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

மேலும் ஏர்டெக்கன் குறைந்த கட்டண விமான நிறுவனத்தை நடத்தி வந்த கேப்டன் கோபிநாத், புதிதாக மீண்டும் ஒரு விமான சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். அதில் முதலீடு செய்யவும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளன. ஆனால், இவருக்கு லைசென்ஸ் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு. இவரது ஏர்டெக்கனை வாங்கி தனது நிறுவனத்தோடு இணைத்து அதையும் சேர்த்து ஊத்தி மூடினார் விஜய் மல்லையா என்பது நினைவுகூறத்தக்கது.

அதே போல ஏர் ஏசியா நிறுவனமும் இந்தியாவின் விமான நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீடு வரப் போகிறது என்ற செய்தியால் அதன் பங்கு விலைகள் 6 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+