நாளை காணும் பொங்கல்.. நீங்க மாட்டு வண்டி கட்டிகிட்டு எப்படி சென்னை மெரினாவுக்கு போகனும் தெரியுமா?
சென்னை: காணும் பொங்கல் நாளை கொண்டாப்பட உள்ளதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காணுல் பொங்கல் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, காமராஜர் சாலை மற்றும் மெரினா கடற்கரையில் மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படும்.
போர் நினைவுச் சின்னத்தை தாண்டி பஸ் மட்டும்தான்
பாரிமுனை சந்திப்பிலிருந்து வரும் சென்னை மாநகரப் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து வாகனங்களும் போர்நினைவுச் சின்னச் சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு, வாலாஜா சந்திப்பு, அண்ணாசாலை மற்றும் முத்துசாமி சந்திப்பு வழியாக அவரவர் இடத்தினை சென்றடையும்.
முத்துசாமி சந்திப்பிலிருந்து காமராஜர் சாலை வரும் வாகனங்கள்; வாலாஜா சந்திப்பிலிருந்து கொடிமரச் சாலை வழியாக செல்ல அனுமதியில்லை. மேற்படி வாகனங்கள் அண்ணா சிலை, வாலாஜா சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக கண்ணகி சிலையை அடையலாம். வாலாஜா சந்திப்பிலிருந்து கொடி மரச் சாலை வழியாக தீவுத் திடலுக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இடதுபுறமாக திரும்ப அனுமதிக்கப்படும். மெரினா நோக்கிச் செல்லும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னம் தாண்டி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. மெரினா செல்லும் வாகனங்கள் வாலாஜா சந்திப்பிலிருந்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக காமராஜர் சாலை - சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பு வரை வர அனுமதிக்கப்படும்.
பெரியார் சிலை சந்திப்பிலிருந்து சுவாமி சிவானந்தா சாலை வழியாக மெரினா கடற்கரைக்குச் செல்கின்ற பொதுமக்களின் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். மற்ற வாகனங்கள் அண்ணா சிலை, வாலாஜா சாலை வழியாகச் சென்று அவரவர் இடத்தினை அடையும்.
சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் மெரினா நோக்கிச் செல்லக் கூடிய வாகனங்கள் மக்களை இறக்கிவிட்டபின் சாலையின் இருபுறமும் ஒரு வரிசையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதை
பெல்ஸ் சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டு, பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும். எனவே அண்ணா சிலையிலிருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலை நோக்கிச் செல்ல வேண்டுமென்றால் விக்டோரியா ஹாஸ்டல் ரோடு வழியாக பாரதி சாலை, கண்ணகி சிலை சென்றடையலாம். அது போன்றே போர் நினைவுச் சின்னம் நோக்கிச் செல்லக் கூடிய வாகனங்கள் சட்டமன்ற உறுப்பினர் விடுதி சாலை வழியாக சிவானந்தா சாலை, போர் நினைவுச் சின்னம் அடையலாம்.
விக்டோரியா ஹாஸ்டல் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாலாஜா சாலையிலிருந்து மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும், பாரதி சாலையிலிருந்து வாகனங்கள் நுழைவது தடை செய்யப்படும்.
உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை வழியான வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படும்.
பாரதி சாலை பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் நேராக கண்ணகி சிலைக்குச் செல்வது தடை செய்யப்படும். மேற்படி வாகனங்கள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை, விக்டோரியா ஹாஸ்டல் சாலை வழியாக கண்ணகி சிலையை அடையும்.
கண்ணகி சிலையிலிருந்து உழைப்பாளர் சிலை நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டு, வாகனங்கள் பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா சாலையை அடையும்.
பாரதி சாலை விஆர் பிள்ளை தெரு சந்திப்பிலிருந்து வாகனங்கள் கண்ணகி சிலை நோக்கிச் செல்வது தடை செய்யப்பட்டு, மேற்படி வாகனங்கள் பாரதி சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை வழியாக அவரவர் இலக்கினை அடையலாம்.
காமராஜர் சாலையில் காந்தி சிலை சந்திப்பிலிருந்து கண்ணகி சிலை சந்திப்பு வரையிலான இடைப்பட்ட சாலையில் மக்கள் அதிகஅளவில் திரண்டால், போக்குவரத்தானது காந்தி சிலை சந்திப்பில் திருப்பி விடப்பட்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, சங்கீதகான சபா, டிடிகே சாலை, இராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணாசாலை, அண்ணா சிலை அடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டு வண்டிகளுக்கான பாதை
மேலும் மாட்டு வண்டிகள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை மற்றும் அண்ணாசாலையில் பல்லவன் சாலை சந்திப்பிற்குப் பிறகு வருவது தடை செய்யப்படும். வடசென்னையில் இருந்து வருகின்ற வண்டிகள் மன்றோ சிலையிலிருந்து பல்லவன் சாலை சந்திப்பு வரை ஒரு வரிசையில் நிறுத்த அனுமதிக்கப்படும். அதுபோன்றே தென் சென்னையிலிருந்து வரும் மாட்டு வண்டிகள் தெற்கு கரை சாலை சந்திப்பில் திருப்பிவிடப்பட்டு சீனிவாசபுரம் சாலை மற்றும் அதன் அருகில் உள்ள காலியிடத்தில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
வாகன நிறுத்துமிடங்கள்
வாகனங்களை நிறுத்த கடற்கரை உட்புறச் சாலை, சுவாமி சிவானந்தா சாலையில் ஒருபுறம், வாலாஜா சாலை - மெட்ரோ இரயில்வே நிறுத்தம், வெலிங்டன் சீமாட்டி பள்ளி வளாகம், . இராணி மேரிக் கல்லூரி, சீனிவாசபுரம் சாலை மற்றும் அதனருகில் உள்ள காலியிடம், விக்டோரியா விடுதி, பொதுப்பணித்துறை வாகன நிறுத்துமிடம் (தலைமைச் செயலகம் எதிரில்)
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications