பாக் அரசுக்கு எதிராக புரட்சி! பார்லி. முற்றுகைப் போராட்டத்தில் பெரும் வன்முறை!!

பாகிஸ்தானின் மதகுருவான தாகீர் உல் காத்ரி கனடாவில் வசித்து வந்தார். தற்போது பாகிஸ்தான் திரும்பியிருக்கும் அவர் புரட்சி எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறார். தாகீர் உல் காத்ரி தலைமையிலான தெக்ரீக் இ மின்ஹாஜுல் குரான் கட்சி, ஆளும் அரசு பதவி விலக வலியுறுத்தி லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத் வரை மிக பிரமாண்டமான 2 நாள் பேரணியை நடத்தியது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் பேசிய காத்ரி, தற்போது பேரணி முடிந்து விட்டது. ஆனால் புரட்சி தொடங்கி விட்டது, பாகிஸ்தானில் நிலவும் லஞ்ச ஊழல், நேர்மையின்மை, தீவிரவாதம் போன்றவற்றுக்கு முடிவு ஏற்படும் வகையில் புரட்சி இருக்கும். இதனால் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி பிரதமர் அஷ்ரப், அதிபர் ஆசிப் அலி சர்தாரியிடம் பரிந்துரை செய்யவேண்டும். அதேபோன்று படுகொலைகள் பஞ்சாப் மற்றும் பலுசிஸ்தான் மாகாண சட்டசபைகளும் கலைக்கப்பட வேண்டும். இதற்கு கெடு விதிக்கிறோம் என்று கூறியிருந்தார். இந்த கெடுவை ஏற்று பலுசிஸ்தான் மாகாண அரசை மட்டும் அந்நாட்டு அரசு கலைத்திருக்கிறது.
இந்நிலையில் இன்று மதகுரு தாகீர் உல் காத்ரீயின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சித்தனர். ஆனால் அங்கு பல்லாயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாடாளுமன்ற சாலையில் ஒன்றுதிரண்ட அவர்கள் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. போலீசார் நோக்கி கற்கள் வீசப்பட்டன. இதானல் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாகீர் உல் காத்ரீயின் ஆதரவாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஓய்வதாக இல்லை. மீண்டும் அதே பகுதியில் ஒன்று திரள வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தனர். இருப்பினும் அவர்கள் அங்கிருந்து அகலவில்லை. இதனால் இஸ்லாமாபாத்தில் பதற்றம் நீடித்தே வருகிறது.
பாராளுமன்ற சாலையில் திரண்ட ஆண்களும், பெண்களும் பாகிஸ்தான் பிரதமருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவர்களை அமைதிப்படுத்த முயன்ற போலீசார் மீது சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். சிறிது தூரம் கலைந்து ஓடிய மக்கள் மீண்டும் திரும்பி வந்து போலீசார் மீது கற்களை வீசினர்.
கலவரம் எல்லை மீறி போனதால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். எனினும், கலைந்து செல்ல மறுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பியபடி பாராளுமன்ற சாலையில் குழுமியுள்ளனர். இதனால், அப்பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நீடித்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications