இருளர் பெண்கள் கற்பழிப்பு: 5 போலீசாரின் சஸ்பெண்ட் சரியே!... ஹைகோர்ட் தீர்ப்பு
சென்னை: இருளர் இன பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் திருக்கோவிலூர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீஸ்காரர்களை பணிஇடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி விழுப்புரம் மாவட்டம், திருகோவிலூர் தாலுகாவில் உள்ள டி.மண்டபம் கிராமத்தை சேர்ந்த இருளர் இனத்தை சேர்ந்த பெண்களை பலாத்காரம் செய்யதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், போலீஸ்காரர்கள் ஆர்.தனசேகரன், ஆர்.பக்தவச்சலம், கார்த்திகேயன் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் பணிஇடைநீக்கம் செய்து 28.11.2011 அன்று விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீனிவாசன் உட்பட 5 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
பழங்குடி இனத்தை சேர்ந்த 4 பெண்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்து, அவர்களை கற்பழித்ததாக தீவிர குற்றச்சாட்டுகள் மனுதாரர்களுக்கு எதிராக உள்ளது.
இவர்கள் மீதான கற்பழிப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்த பின்னர், விசாரணை கோர்ட்டில் இந்த ஆதாரங்களை வைத்து அவர்கள் நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம். இப்போது மனுதாரர்கள் சீனிவாசன் உட்பட 5 பேர் மீதும் கற்பழிப்பு உள்ளிட்ட தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதால், அவர்களை சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி சந்துரு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications