Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

களை கட்டிய காணும் பொங்கல்…. சென்னை, குமரி சுற்றுலா தலங்களில் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

காணும் பொங்கலை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை, குமரி கடற்கரை, திருச்செந்தூர் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

காணும் பொங்கல் தினத்தன்று உற்றார் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் உண்டு மகிழ்வது தனி மகிழ்ச்சி. இன்று பொங்கல் பண்டிகையில் மூன்றாம் நாள் என்பதால் காலையிலேயே சுற்றுலா மையங்களில் பொதுமக்கள் குவியத்தொடங்கியுள்ளனர்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பிற்காகவும், அசம்பாவித சம்வங்கள் நிகழாமல் தடுக்கும் வகையிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரீனா கடற்கரையில் குவியும் மக்கள்

மெரீனா கடற்கரையில் குவியும் மக்கள்

சென்னையில் உள்ள கடற்கரையில் சாதாரண விடுமுறை நாட்களிலேயே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று காணும் பொங்கலை ஒட்டி காலை முதலே விதவிதமான உணவுகளை சமைத்து எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு வரத்தொடங்கிவிட்டனர் பொதுமக்கள். காலை முதலே மெரினா கடற்கரை, காந்தி சிலை அருகேயும், லைட் ஹவுஸ் அருகேயும் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.

இதேபோல் திருவான்மியூர், பெசன்ட்நகர் கடற்கரை பகுதியிலும், கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் பூங்கா, மகாபலிபுரம், எம்ஜிஎம், கிஷ்கிந்தா, விஜிபி உள்ளிட்ட கேளிக்கை பூங்காக்களிலும் மக்கள் குவியத்தொடங்கியுள்ளனர். இதேபோல் பழவேற்காடு, வேடந்தாங்கல் உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். இதனையொட்டி மாநகர போக்குவரத்து சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குமரியில் குவிந்த பயணிகள்

குமரியில் குவிந்த பயணிகள்

கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் திருச்செந்தூர் கடற்கரையில் குவிந்த மக்கள் கடலில் குளித்துவிட்டு உறவினர்களுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவிடாமல் படகுசேவை நடைபெறுகிறது. கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பொதுமக்கள் அனைவரும் படகில் சென்று பார்க்க வசதியாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

குற்றாலத்தில் குவிந்த பயணிகள்

குற்றாலத்தில் குவிந்த பயணிகள்

இதேபோல் நெல்லை மாவட்டம் சுற்றுலா தலங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. குற்றால அருவிகளில் தண்ணீர் குறைந்த அளவே விழுந்தாலும் காணும் பொங்கல் என்பதால் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அதேபோல் சுற்றுசூழல் பூங்கா, பாபநாசம் பாணதீர்த்த அருவி, சொரிமுத்து அய்யனார் கோவில், ,குண்டாறு ,அடவி நைனார் நீர்த்தேக்கம் ,திருமலைகோவில் என அனைத்து பகுதிகளிலும் மக்கள்கூட்டம் அதிகரித்துள்ளது. வனபகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளை சோதனை இட தனிக்குழுக்களை வனத்துறையினர் ,போலீசார் அமைத்து சோதனை நடத்திவருகின்றனர்.

கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்

கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்

கொடைக்கானலில் பனியை பொருட்படுத்தாமல் காலை முதலே சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். முக்கிய இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, அமைதிப் பள்ளத்தாக்கு, மியூசியம் ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. அவர்கள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஏற்காட்டில் கொண்டாட்டம்

ஏற்காட்டில் கொண்டாட்டம்

காணும் பொங்கலையொட்டி ஏற்காட்டில் வழக்கத்தை விட அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஏற்காடுக்கு வந்திருந்தனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் படகு சவாரி செய்து எழில் கொஞ்சும் ஏற்காட்டின் அழகை கண்டு களித்தனர்.

இதே போல் ஒகேனக்கல் அருவியிலும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் காவிரி ஆற்றில் குளித்து நீராடி ஜாலியாக பொழுதை களித்தனர்.

மேட்டூரில் குவிந்த கூட்டம்

மேட்டூரில் குவிந்த கூட்டம்

இதே போல் மேட்டூருக்கும் ஏராளமான பேர் குடும்பத்தினருடன் வந்திருந்தனர். அவர்கள் அணையில் தெரிந்த நந்தி சிலை, மற்றும் கோபுரங்களை கண்டு ரசித்தனர்.மேலும் மேட்டூர் அணை பூங்காவில் அவர்கள் குடும்பத்தோடு ரசித்து பார்த்தனர். இதனால் மேட்டூர் நகர் முழுவதும் கூட்டம் அலைமோதியது. இதே போல் சேலம் அண்ணா பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது.

திருச்சியில் முக்கொம்பு, காவிரி கரையோர சுற்றுலா தலங்களில் குவிந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக கொண்டாடினர். வெளிநாட்டில் இருந்த வந்திருந்த சுற்றுலா பயணிகளும் அவர்களுடன் சேர்ந்து காணும் பொங்கலை கொண்டாடினர். ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் உள்ளிட்ட கோவில்களில் பொதுமக்கள் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+