கட்டணத்தை ஜெ. உயர்த்தினால் அது துணிச்சல், மத்திய அரசு உயர்த்தினால் 'வெந்த புண்ணிலே வேலா'?

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தினால் துணிச்சலான செயல். ஆனால் மத்திய அரசு கட்டணத்தை உயர்த்தினால் வெந்த புண்ணிலே வேலா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வர் ஜெயலலிதா 27ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசும்போது, ‘‘என்னுடைய தலைமையின் கீழ் உள்ள மாநில அரசு 10 ஆண்டுகளுக்கு பின்னர், மின் கட்டணங்களை உயர்த்துவது என்ற துணிச்சலான முடிவை எடுத்தது. இது நமது மாநிலத்தில் மின் சக்தி இடர்ப்பாட்டை சமாளிப்பதற்காக என்னுடைய அரசு மேற்கொண்ட உறுதியான தீர்வினைக் காட்டுகிறது'' என்று சொல்லியிருக்கிறார்.

அதிமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலத்தில் மின் கட்டண உயர்வினை 5 சதவீத உயர்வு, 10 சதவீத உயர்வு அல்ல, ஒரேயடியாக ஒரே நேரத்தில் 37 சதவீத அளவிற்கு உயர்த்தி அறிவித்தார். இதைத் தான் ஜெயலலிதா ‘‘துணிச்சலான முடிவு'' என்று கூறி தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறார்; டெல்லியில் முதல்வர்கள் கலந்து கொண்ட மாநாட்டில்.

திமுக ஆட்சியில் 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தவர்களுக்குக் கூட யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது 600 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உபயோகிப்போருக்கு யூனிட் ஒன்றுக்கு 5 ரூபாய் 75 காசு என்ற அளவிற்கு கட்டணம் உயர்த்தப்பட்டது.

திமுக கழகம் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல் விலையை, டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தவில்லையா? உயர்த்திக் கொண்டு தான் இருந்தார்கள்.

இருந்தாலும் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தச் சுமையையெல்லாம் அரசு தாங்கிக் கொண்டு பொது மக்கள் பாதித்து விடக் கூடாது என்பதற்காக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ளவில்லையா? ஆவின் கட்டணத்தை அதிகமாக உயராமல் பார்த்துக் கொள்ளவில்லையா?.

மத்திய அரசு ரயில் கட்டணத்தை, தமிழக அரசின் பேருந்து கட்டணத்தை விட குறைந்த அளவிற்கே உயர்த்திய போதிலும், அதனை ‘‘வெந்த புண்ணிலே வேல்'' என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது ஜெயலலிதா அரசு.

தமிழக அரசு கட்டணத்தை உயர்த்தினால் அது துணிச்சலான செயல், ஆனால் மத்திய அரசு உயர்த்தினால் அது மட்டும் ‘‘வெந்தபுண்ணிலே வேலா?'' என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்!.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+