மருத்துவமனையில் உண்ணாவிரதம் சிறப்பு முகாம் அகதிகள் 9 பேர் நள்ளிரவில் கைது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சிறப்பு முகாமில் இருந்து தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்றக் கோரி மருத்துவமனையிலும் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 9 ஈழத் தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த செல்வராசா, சவுந்தர்ராஜன், தவதீபன், நந்தகுமார் உள்பட 9 பேர் கடந்த மாதம் 23-ந் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை.
இவர்கள் 9 பேரின் உடல்நிலை மோசமானதால் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அங்கும் சிகிச்சையை ஏற்க மறுத்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர்களிடம் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து 9 பேரையும் தற்கொலைக்கு முயன்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நள்ளிரவில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் அங்கும் தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
நடைபயணத்துக்கு தடை
இதனிடையே ஈழத் தமிழர்களை அடைத்து வைத்திருக்கும் சிறப்பு முகாம்களை மூடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை கு. ராமகிருட்டிணன் தலைமையில் பூவிருந்தவலியிருந்து செங்கல்பட்டு நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த நடைபயணத்துக்கு போலீசார் தடை விதித்து நடைபயணம் சென்றோரை கைது செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications