பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து மாணவி பலி: 4 பேர் கைது!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியின் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து எல்.கே.ஜி மாணவி பலியான சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் உள்ளிட்ட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசிக்கும் வெங்கடேசன்-பவித்ரா தம்பதியினர் மகள் மாலதி. அருகில் உள்ள சி.எம்.எஸ் தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவி மாலதி நேற்று காலை 11 மணி அளவில் விடப்பட்ட இடைவேளைக்குப் பிறகு காணாமல் போயிருக்கிறார். இதனையடுத்து ஆசிரியர்கள் தேடியிருக்கின்றனர். அப்போது பள்ளி வளாகத்திற்குள் திறந்திருந்த கழிவுநீர் தொட்டிக்குள் மாணவியின் சடலத்தை கண்டெடுத்தனர்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே, தீயணைப்பு படையினருடன் வந்து மாணவி மாலதியை மீட்டனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பெற்றோர்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பள்ளி தாளாளர் ஸ்டீபன் தாஸ், அவரது சகோதரியும் பள்ளி முதல்வருமான மெர்ஸி, அவரின் கணவர் கே.பிரபாகரன், உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மராமத்து பணிகள் மேற்கொள்ள சமீபத்தில் தான் செப்டிக் டேங்கை திறந்தோம் என்று பள்ளி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேரை ஊத்தங்கரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications