காவிரி, மின்சாரம், டீசல்-ரயில் கட்டண உயர்வு.. எல்லாத்துக்கும் சேர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம்

அ.திமுக பொதுச் செயலாளரும், முதல்- அமைச்சருமான ஜெயலலிதா
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமாக விளங்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில், மாநில அரசின் உரிமைகளை பறிப்பதையும், காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளின் நியாயமான கோரிக்கைகளை நிராகரிப்பதையும், இந்தியப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதையும், திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது.
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத சூழ்நிலையில், அதனை திமுகவும் வேடிக்கை பார்த்து வந்த நிலையில், நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் பாரதப் பிரதமரை நேரில் சந்தித்தும், கடிதங்கள் வாயிலாகவும் இதனை வலியுறுத்தினேன்.
இதனை மத்திய அரசு உதாசீனம் செய்துவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தொடுத்து, அதன் விளைவாக 31.1.2013க்குள் மத்திய அரசு தனது முடிவினை அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும், அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இந்த விஷயத்தில் மவுனம் சாதித்து வருகிறது. கருணாநிதியும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடக்கூடாது என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக மக்கள் கருதுகின்றனர்.
இதுமட்டும் அல்லாமல், டெல்லி மாநில அரசால் தேவையில்லை என்று ஒப்படைக்கப்பட்ட மின்சாரத்தை தமிழகத்திற்கு தருவதற்கும், கூடங்குளம் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையினை நிறைவேற்றுவதற்கும், தமிழகத்திற்கு தேவையான மண்ணெண்ணெயினை அளிப்பதற்கும், கூடுதல் நிதியினை ஒதுக்கீடு செய்வதற்கும், டிஜிட்டல் உரிமத்தை தமிழக மக்களின் நலனுக்காக செயல்படும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷனுக்கு தருவதற்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மறுத்து வருகிறது.
இன்னும் சொல்லப் போனால், தமிழக அரசின் தேவைகளைப் பற்றியும், உரிமைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்பதற்கு கூட போதிய கால அவகாசத்தை வழங்க மத்திய அரசு மறுக்கிறது.
இதே போன்று, விஷம் போல் உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல், பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, ரயில்வே கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி விலைவாசி மேலும் உயர வழி வகுக்கும் நடவடிக்கைகளை, மக்களை வாட்டி வதைக்கும் நடவடிக்கைகளை, மக்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கும் நடவடிக்கைகளை திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்து வருகிறது.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுகின்ற, கூட்டாட்சித் தத்துவத்திற்கு கேடு விளைவிக்கின்ற திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து கொண்டு, தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்கின்ற; காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடாத; தமிழகத்திற்கு தேவையானவற்றை தர மறுக்கின்ற; பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உட்பட அனைத்துப் பொருட்களின் விலைகளையும் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருக்கின்றன.
ரயில்வே கட்டணத்தை உயர்த்தியுள்ள திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், 24ம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி அளவில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில், அரசுரீதியான மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும், அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் இணைந்து செயல்பட்டு வரும் அனைத்து இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டங்களில் தவறாமல் கலந்து கொண்டு, திமுக அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான சர்வாதிகார மத்திய கூட்டணி அரசுக்கு தங்களுடைய கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.
மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications