மாவட்டங்களில் நுழைய ராமதாஸுக்கு தடை- தொல். திருமாவளவன் எதிர்ப்பு
கடலூர்: ஒரு அரசியல் தலைவருக்கு தடை விதிப்பதன் மூலம் வன்முறையைத் தடுத்துவிட முடியாது என்றும் தலித்துகளுக்கு எதிராக இதர சாதியினரை ஒருங்கிணைப்பதற்காகவே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், சமூக பாதுகாப்பு சட்டமான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது. இந்த சட்டத்தால் ஜாதி வன்கொடுமைகளை தடுக்க முடியாத நிலைதான் உள்ளது. கடந்த 1999-ம் ஆண்டு என்னை கடலூர் மாவட்டத்திற்குள் நுழையக்கூடாது என கருணாநிதி தடைவிதித்தார். ஆனால் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா வாயை திறக்கவே இல்லை.
ஒரு அரசியல் தலைவருக்கு தடைவிதிப்பது என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால் ஜனநாயகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கையை ஜெயலலிதா எடுக்காதது ஏன்?.
டாக்டர் ராமதாஸ், கருணாநிதியை வன்னியர்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறார். ஆனால் கருணாநிதி ராமதாஸ் மீது விதிக்கப்பட்டுள்ள தடைக்கு கண்டனம் தெரிவித்து ராமதாசையும், ஜெயலலிதாவையும் அரசியல் நெருக்கடிக்கு ஆளாக்கியுள்ளார்.
தலித்துகளுக்கு எதிராக மற்றவர்களை ஒருங்கிணைப்பதே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றமாகும். இதற்கென எடுக்கப்படும் முயற்சிகளும் தவறானவை. ஆனால் அரசு இதை ஏன் வேடிக்கை பார்க்கிறது என்பது புதிராக உள்ளது. வன்முறையை தடை விதிப்பதன் மூலம் தவிர்க்க முடியாது என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications