மும்பை குடிசைப் பகுதியில் பயங்கர தீ: 6 பேர் பலி, 8 பேர் படுகாயம், 50 வீடுகள் நாசம்
மும்பை: தெற்கு மும்பையில் உள்ள குடிசைப் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெற்கு மும்பையில் உள்ள மாஹிம் அருகே நயாநகர் குடிசைப் பகுதி உள்ளது. அங்கு இன்று காலை 5 மணி அளவில் திடீர் என்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள சுமார் 50 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். குடிசைப் பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் 7 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 6 பேர் உடல் கருகி பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
மாஹிம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் சம்பவ இடத்திற்கு சென்று மக்களுக்கு ஆறுதல் கூறினார். வீடுகளை இழந்தவர்களுக்கு வசிப்பிடத்திற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications