தைப்பூசம்: பழனி, திருச்செந்தூர் முருகன் கோவில்களில் குவியும் பக்தர்கள்
திருச்செந்தூர்: தைப்பூசத்திற்காக திருச்செந்தூர் மற்றும் பழனி முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
தைப்பூசத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவில் நடை இன்று அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, காலை 8 மணிக்கு அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனையைத் தொடர்ந்து சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில், தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். மாலையில் சிறப்பு பூஜை நடக்கிறது.
சுவாமி, அம்பாள் தனித்தனி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சேருவர். மாலை அணிந்து குழுக்களாக பாதயாத்திரை வரும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பாதுகாப்பு பணியில் 3 மாவட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போதிய குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் இல்லை என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
பழனியில் இன்று நடக்கும் தைப்பூச திருவிழாவைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்துள்ளனர். இவர்களில் சிலர் இன்று அதிகாலை சுவாமியை தரிசிப்பதற்காக வின்ச் இயங்கும் பகுதிக்கு வந்தனர். அப்போது அங்கு சுற்றித் திரிந்து கொண்டிருந்த வெறி நாய் ஒன்று பக்தர்களை கடித்துக் குதறியது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவரையும் கடித்துக் குதறியது. இதனையடுத்து காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் பழனி அரசு மருத்துவமைனையில் தடுப்பு மருந்து அளிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். முருகனின் ஆறுபடை வீடுகளில் எங்கும் சரவணபவ கோஷங்கள் ஓங்கி ஒலிக்கிறது.
பழனியில் சமீப காலமாகவே வெறிநாய் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், அதை உள்ளூர் நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பக்தர்களிடம் இருந்து குமுறலாக வெளிப்படுவதை காண முடிகிறது. திருச்செந்தூர், பழனி நோக்கி கேரள பக்தர்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications