Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடும் குற்றம் செய்த சிறார்கள் தப்பிக்கும் அவலம்.. நீதித்துறையின் தவறு காரணமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எவ்வளவு பெரிய குற்றமாக இருந்தாலும் சரி, அது கொலையாக இருந்தாலும் சரி, கொடூரமான பாலியல் பலாத்காரமாக இருந்தாலும் சரி, குற்றம் இழைத்த நபர் 18 வயதுக்குட்பட்டவராக இருந்தால் அவருக்குத் தண்டனை கிடையாது என்பதை அனைவரையும் பெரும் விரக்தியிலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் பட்டப் பகலில் சக மாணவர்கள் முன்பு தனக்கு பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியையை மிகக் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றான் ஒரு மாணவன். அவன் மைனர் என்பதால் அவனை சிறையில் அடைக்கவில்லை, கைதும் செய்யவில்லை. மாறாக சிறார் முகாமில் அடைத்தனர். பின்னர் வீட்டுக்கும் அனுப்பி வைத்து விட்டனர். வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை.

டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 24 வயது மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் மிக்க கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்தது. அதில் ஒருவன் மட்டும் 2 முறை பலாத்காரம் செய்தான், இரும்புக் கம்பியால் அப்பெண்ணின் வயிற்றில் மிகக் கொடூரமாக தாக்கினான். மாணவி பின்னர் உயிரிழந்தார். ஆனால் 2 முறை பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கிய நபர் மைனர் என்று சிறார் சீர்திருத்த வாரியம் அறிவித்து விட்டது. இதனால் அவனுக்கு சிறைவாசம் கிடையாது, தண்டனையும் கிடையாது, ஜூன் மாதமே அவன் விடுதலையாகவும் போகிறான்.

இதெல்லாம் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. மனக் கொந்தளிப்பை ஏற்படுத்துவதாக உள்ளன. ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்ட இவர்களுக்குத் தண்டனை இல்லை என்பதே சராசரி மக்களின் கவலையாக உள்ளது. ஆனால் சட்டம் சொல்வது - இவர்கள் மைனர்கள், எனவே தண்டிக்க முடியாது, சீர்திருத்தவே முடியும் என்று சொல்கிறது.

தப்ப வைக்கும் சட்டம்

தப்ப வைக்கும் சட்டம்

ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம். ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பார்கள். ஆனால் கண்ணுக்கு முன்பாகவே இவன் குற்றவாளி, மிகக் கொடூரமான செயலில் ஈடுபட்டான் என்று அத்தனை பேருக்கும் தெரிகிறது. ஆனால் அவனுக்கு சட்டம் பாதுகாப்பாக இருக்கிறது, அவனை பத்திரமாக வெளியேற வைக்க சட்டமே உதவியாக வருகிறது. இதுதான் மக்களை குழப்புவதாக உள்ளது.

சட்டம் என்ன சொல்கிறது?

சட்டம் என்ன சொல்கிறது?

சிறார் குற்றவாளிகளை கையாளுவதை 2000மாவது ஆண்டு சிறார் நீதிச் சட்டம் பார்த்துக் கொள்கிறது. இந்த சட்டத்தின் 14வது பிரிவின்படி, குற்றம் இழைத்த ஒருவர் சிறார் என்றால் அதாவது 18 வயதுக்குட்பட்டவர் என்றால், அவரைக் கைது செய்வது, விசாரிப்பது, தண்டிப்பது உள்ளிட்ட அனைத்தையும் சாதாரண சட்டத்தின் கீழ் செய்ய முடியாது. மாறாக சிறார் சீர்திருத்த சட்டத்தின் கீழ் தான் செய்ய வேண்டும்.

யார் சிறார்...?

யார் சிறார்...?

சிறார் சீர்திருத்தச் சட்டம் சட்டம் 2 (1)ன் படி 18 வயது நிரம்பாத அனைவருமே மைனர்கள்தான். அதாவது சிறார்கள்.

என்ன தவறு செய்தாலும் அதிகபட்சம் 3 வருடம்தான்

என்ன தவறு செய்தாலும் அதிகபட்சம் 3 வருடம்தான்

சிறார் சீர்திருத்தச் சட்டம் 15(1)(g)என் படி மைனர் வயதுடைய ஒருவர், அந்த வயதில் எத்தகைய குற்றத்தை இழைத்திருந்தாலும், அவரை அதிகபட்சம் 3 வருடம் வரைமட்டும் தண்டிக்க முடியும். அதுவும் கூட சிறையில் அடைக்கக் கூடாது. மாறாக சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி அங்கு அவரை நல்வழி போதனை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் அவரை விடுவித்து விட வேண்டும்.

சிறைக்கு அனுப்ப முடியாது

சிறைக்கு அனுப்ப முடியாது

ஒரு வேளை குற்றம் இழைத்த நபர் 3 ஆண்டு ஹோம் தண்டனை விதிக்கப்பட்ட நிலையி்ல குற்றம் சாட்டப்பட்ட மைனருக்கு சீக்கிரமே 18 வயது வந்து விட்டால் அவரை உடனடியாக விடுவித்து விட வேண்டும். அவரைப் பிடித்து சிறையில் அடைக்க முடியாது.

ஜூன் மாதமே ரிலீஸாகப் போகும் டெல்லி மைனர்

ஜூன் மாதமே ரிலீஸாகப் போகும் டெல்லி மைனர்

டெல்லி பாலியல் பலாத்கார வழக்கில் தற்போது பிடிபட்டுள்ள, மைனர் என்று சிறார் சீர்திருத்த வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பையனுக்கு தற்போது 17 வயது நடந்து கொண்டுள்ளது. அவனுக்கு வருகிற ஜூன் மாதம் 18 வயது தொடங்குகிறதாம். எனவே அதுவரை மட்டுமே அவன் ஹோமில் இருக்க முடியும். அதன் பின்னர் அவனை விடுவித்து விட வேண்டும். மீண்டும் அவனை இந்த வழக்கில் கைது செய்யவும் முடியாதாம்.

டெல்லி மைனரின் பின்னணி

டெல்லி மைனரின் பின்னணி

இந்தப் பையன்தான், ஓடும் பஸ்சில் நடந்த கொடூரமான பலாத்கார செயலில் பெரும் பங்காற்றியுள்ளான். இவன்தான், அந்தப் பெண்ணையும், அவரது நண்பரையும் பஸ்சில் ஏறச் சொல்லியுள்ளான். பின்னர் இவன்தான் பலாத்கார ஐடியாவையும் மற்றவர்களுக்குக் கொடுத்துள்ளான்.

மிருகத்தை விட மோசமாக

மிருகத்தை விட மோசமாக

ஒரு மிருகத்தை விட மோசமாக நடந்து கொண்டுள்ளான் இந்தப் பையன். 2 முறை அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். அதில் 2வது முறை இவன் சீரழித்தபோது அப்பெண் மயக்க நிலையி்ல் இருந்துள்ளார், பாவம். நிலை குலைந்த நிலையி்ல் இருந்த அப்பெண்ணை இந்த சிறுவன் மிருகத்தை விட மோசமாக நடந்து கொண்டு சீரழித்துள்ளான்.

வீட்டை விட்டு ஓடி வந்தவன்

வீட்டை விட்டு ஓடி வந்தவன்

சட்டத்திற்கு உட்பட்டு இவனது பெயர் விவரங்களை போலீஸார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் இவன் உ.பி. மாநிலம் பதான் என்றஊரைச் சேர்ந்தவன். ஆறரை வருடங்களுக்கு முன்பு இவன் உ.பியை விட்டு டெல்லிக்கு ஓடி வந்தான். வேலை தேடி இங்கு வந்துள்ளான். வீட்டை விட்டு வந்தபோது இவனுக்கு 11 வயதாம்.

 2 சகோதரிகள்..

2 சகோதரிகள்..

இந்தப் பையனுக்கு 2 சகோதரிகள், 4 சகோதரர்களாம். இவன்தான் வீட்டில் மூத்தவனாம். இவனது தந்தை மன நலம் சரியில்லாதவர். தாயார் விவசாயக்
கூலி ஆவார். இப்படிப்பட்ட பரிதாபத்துக்குரிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இவன் இவ்வளவு கொடூரமாக, குரூரமாக நடந்து கொண்டுள்ளதுதான் அனைவரையும் அதிர வைத்துள்ளது.

மாணவியின் தந்தை குமுறல்

மாணவியின் தந்தை குமுறல்

இந்தப் பையன் மைனர் என்பதால் அவனுக்குக் கடும் தண்டனை கிடைக்காது என்ற தகவல் மாணவியின் தந்தையை கொந்தளிக்க வைத்துள்ளது. அவர் கூறுகையில், அவனுக்கு மரண தண்டனை மட்டுமே குறைந்தபட்ச தண்டனையாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து. அவன் வாழவே தகுதியற்றன். மிகவும் மோசமான மிருகன் அவன். அவனுக்கும், மற்ற ஐந்து பேருக்கும் மரண தண்டனை வாங்கித் தர வேண்டியது காவல்துறை மற்றும் மத்திய அரசின் கடமையாகும் என்றார்.

சட்டம் ஒரு இருட்டறை என்று அன்று அண்ணா சொன்னார்... ஆனால் வக்கீல்களின் வாதம் நிச்சயம் அந்த இருளைப் போக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் என்ற நம்பிக்கையோடு இருப்போம்..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+