பலாத்காரத்துக்கு கடும் தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஜனாதிபதி!!

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இத்தகைய குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இதனால் நீதிபதி வர்மா தலைமையில் மத்திய அரசு ஒரு குழுவை அமைத்தது. அக்குழுவும் தமது பரிந்துரைகளை அரசிடம் அளித்திருந்தது. பாலியல் குற்றங்களுக்கு 20 ஆண்டுகால தண்டனை உள்ளிட்டவற்றை அக்குழு பரிந்துரை செய்திருந்தது.
இதில் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிக்கவும் வகை செய்யும் பிரிவையும் மத்திய அரசு சேர்த்தது. மேலும் பலாத்காரம் என்பதற்கு பதிலாக பெண்களுக்கு எதிரான தாக்குதல் என்றும் மத்திய அரசு திருத்தம் செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமையன்று ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இருப்பினும் சட்டங்களை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்று சில மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருந்தன.
இந்நிலையில் இன்று குடியரசுத் தலைவர் ஒப்புதல் தெரிவித்து அவசர சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications