44வது நினைவு தினம் - கருணாநிதி தலைமையில் அண்ணாவுக்கு அஞ்சலி
Subscribe to Oneindia Tamil

அண்ணாவின் 44வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. ஆண்டுதோறும் அண்ணா நினைவுநாளில் திமுகவினர் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் அமைதிப் பேரணி நடத்துவர்.
அதன்படி இன்றும் பேரணி நடந்தது. இந்தப் பேரணிக்கு கட்சிப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். திருவல்லிக்கேணி காவல் நிலையத்திலிருந்து பேரணி கிளம்பி கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முடிவடைந்தது.
பேரணியில் எம்.பி.க்கள் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் நினைவிடத்தில் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications