மதுரா கோட்ஸ் ஊழியர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர அரசுக்கு வைகோ கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: வி.கே.புரம் மதுரா கோட்ஸ் ஆலை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வி.கே.புரம் மதுரா கோட்ஸ் பஞ்சாலையில் 740 நிரந்தர தொழிலாளர்களும், சுமார் 3000 ஆண், பெண் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர். தங்களுக்கு 19 ஆண்டு ஊதிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தற்போதைய விலைவாசி உயர்வு, வாழ்வாதாரம் இவற்றை கருத்தில் கொண்டு ஊதியம் நிர்ணயித்து வழங்க வேண்டும் எனவும் ஊழியர்கள் அறவழியில் போராடி வருகின்றனர். உரிமைக்கு போராடிய 40 தொழிலாளர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்து போன தொழிலாளி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். பல்வேறு அரசியல் கட்சியின் அரவணைப்பில் இயங்கி வந்த தொழிற்சங்கங்களின் மீது முற்றிலும் நம்பிக்கை இழந்த தொழிலாளர்கள் மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டமைப்பு என்ற கட்சி சார்பற்ற கூட்டமைப்பை உருவாக்கி தொடர்ந்து அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களின் உரிமை போராட்டத்தை மதிமுக முழுமையாக
ஆதரிப்பதோடு தமிழக அரசு விரைந்து செயல்பட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையினை உரிய பேச்சுவார்த்தை மூலம் நிறைவேற்றி தர முன்வர வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+