6 பேருக்கு வேட்டி சேலை, 6 பேருக்கு உதை கொடுத்த விஜய்காந்த்: சட்டசபையில் நத்தம் விஸ்வநாதன் கிண்டல்

சட்டசபையில் தேமுதிகவின் பார்த்திபன் பேசுகையில், டெல்டா விவசாயிகளுக்கு அரசின் நிவாரணம், எதிர்பார்த்தோம். ஆளுனர் உரையில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.
இதற்கு நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கையில், டெல்டா விவசாயிகளைப் பற்றி உங்களைவிட அதிகம் கவலைப்படுபவர் முதல்வர் உரிய நேரத்தில், உரிய நிவாரணம் விரைவில் அறிவிப்பார் என்றார்.
ஆனாலும் பார்த்திபன் விடுவதாக இல்லை. " எங்கள் தலைவர் திரைப்படங்கள் மூலம் சம்பாதித்த பணத்தை வாரி வழங்கும் வள்ளலாக உயிர் இழந்த டெல்டா விவசாயிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்கினார்" என்றார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், ஆமாம். தானே புயலில் பாதிக்கப்பட்ட 6 பேருக்கு வேட்டி வழங்கினார். 6 பேருக்கு சேலை வழங்கினார். 6 பேருக்கு உதை கொடுத்தார் என்று கிண்டலடித்தார்.
அவரைத் தொடர்ந்து அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திரைப்படங்களில் கோடி கோடியாக சம்பாதித்ததை வழங்குவதாக கூறுகிறார். ஆனால் சென்னை, மதுரையில் பொறியியல் கல்லூரிகளும், புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரியும் ஆரம்பித்தாரே தவிர விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றார்.
இதற்கு தேமுதிகவின் சந்திரகுமார், மதுரை, புதுச்சேரியில் கேப்டன் கல்லூரி ஆரம்பித்ததாக கூறுகிறார். இதை ஆதாரத்துடன் நிரூபிக்க தயாரா? எனக் கேட்க, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனோ, அவர் சொன்ன இடத்தில் இல்லை என்றால், இருக்கிற இடத்தில் சொன்னதுபோல் வைத்துக்கொள்ளுங்கள் என்று நக்கலடித்தா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications