டெல்லியில் இளம்பெண்ணை கற்பழிக்க முயன்று வாயில் இரும்பு கம்பியை திணித்த வாலிபர்
டெல்லி: தென்கிழக்கு டெல்லியில் 19 வயது பெண்ணை கற்பழிக்க முயன்றபோது அவர் எதிர்த்ததால் அவரின் வாயில் இரும்புக் கம்பியை திணித்துள்ளார் ஒரு வாலிபர்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள லாஜ்பட் நகரில் தாய் மற்றும் சகோதரருடன் வசிக்கும் 19 வயது பெண் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது லாஜ்பட் நகர் அருகே வசிக்கும் கேபிள் ஆபரேட்டரிடம் எலக்ட்ரீசியனாக இருக்கும் அனில் குமார்(26) அந்த வீட்டுக்கு வந்துள்ளார். மின்சார கட்டணம் வசூலிப்பது போன்று வந்து கதவைத் தட்டியுள்ளார். அந்த பெண் கதவைத் திறந்ததும் அத்துமீறி உள்ளே சென்று அவரை கற்பழிக்க முயன்றுள்ளார்.
ஆனால் அப்பெண் எப்படியோ அவர் பிடியில் இருந்து தப்பித்து சமையல் அறைக்கு சென்று அங்கிருந்த பாத்திரங்களை அனில் மீது வீசியுள்ளார். அதையும் தாண்டி அனில் அப்பெண்ணை பிடிக்கவே அவர் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அனில் அவரை அடித்ததுடன் அங்கிருந்த இரும்பு கம்பியை எடுத்து அவரின் முகத்தில் அடித்ததோடு அதை அவரின் வாயில் திணித்துள்ளார்.
இதில் அப்பெண் காயமடைந்து ரத்தம் கொட்டவே இந்த விஷயத்தை யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று மிரட்டிவிட்டு அனில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து அப்பெண் வெளியே வந்து சத்தம்போட்ட பிறகு அக்கம்பத்தினர் ஓடிவந்து அவரை மூல்சந்த் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அனிலை பரிதாபாத்தில் கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, கற்பழிப்பு முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications