பாக். கணவன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்காக மனைவியை நிர்வாணமாக்கிய பஞ்சாயத்து
லாகூர்: பாகிஸ்தானில் கணவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததற்கு அவரது மனைவியை ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்தி பஞ்சாயத்து தண்டனை அளித்துள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கஸ்பா குஜராத்தைச் சேர்ந்தவர் கல்சூம் மாய். அவரது கணவர் முகமது நவாஸ். நவாஸ் தனது மனைவியின் உறவினர் முகமது பிலாலின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். ஒரு நாள் கள்ளக்காதல் ஜோடி கையும், களவுமாக சிக்கியது.
இதையடுத்து நவாஸுக்கு தண்டனை கொடுக்க அவரது மனைவியை ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்த வேண்டும் என்று உள்ளூர் பஞ்சாயத்து உத்தரவிட்டது. கல்சூம் மாய் பஞ்சாயத்துக்கு வரவழைகக்ப்பட்டார். பஞ்சாயத்து உத்தரவுப்படி பிலால் மற்றும் சிலர் சேர்ந்து கல்சூமை கொடுமைப்படுத்தி ஊர் மக்கள் முன்பு நிர்வாணப்படுத்தினர்.
பிலால் குடும்பத்தினர் நவாஸை அடித்து நொறுக்கினர். இதையடுத்து கல்சூம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கஸ்பா குஜராத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பிலாலின் மனைவியை அசிங்கப்படுத்தியதற்காக நவாஸ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications