ராஜபக்சே வருகையை கண்டித்து போராட்டம்: ரயில்மறியல்… உருவ பொம்மை எரிப்பு

Subscribe to Oneindia Tamil

Law college Students protest against rajapakse visit
கோவை: இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை பீகாருக்கும், திருப்பதிக்கும் வருகிறார். இதனைக் கண்டித்து கோவையில் புதன்கிழமையன்று சட்டக்கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஐ.நா. சபையாலேயே போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னையில் ரயில் மறியல்

இதேபோல், ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து, செங்கல்பட்டில் மாணவ ர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். சென்னை சென்று கொண்டிருந்த சோழன் விரைவு வண்டியை மறித்து, சட்டக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.

உருவபொம்மை எரிப்பு

இதே போல் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் ராஜபக்சேவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவ்வப்போது இலங்கை அதிபருக்கு வரவேற்பை அளிக்கும் மத்திய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் பழங்குடி தமிழர் இயக்கம் சார்பில் இலங்கை அதிபரின் உருவபொம்மை எரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக முழங்கங்களும் எழுப்பப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+