மனைவியைக் கொன்றது ஏன்?... 78 வயது குடிகார தாத்தா பரபரப்பு வாக்குமூலம்
திருவைகுண்டம்: திருவைகுண்டம் அருகே மதுகுடிக்க தாலியை கழற்றி தராத மனைவியை கொடூரமாக வெட்டி கொன்ற 78 கணவர் தாலியை அடகு வைக்க முயன்றபோது சிக்கி கைதானார். மகன்கள் தனக்கு மாதாமாதம் அனுப்பி வைந்த பணத்தை நிறுத்தியதற்கு மனைவிதான் காரணம் என்பதால் அவரைக் கொன்றதாக அவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திருவைகுண்டம் அருகேயுள்ள மேல ஆழ்வார்தோப்பு வேதக்கோவில் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன். இவர் நேற்று காலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த தனது மனைவி பெரிய பிராட்டியை அரிவாளால் வெட்டி கொன்று விட்டு கழுத்தில் கிடந்த தாலியை எடுத்து சென்றார்.
இதுகுறித்து திருவைகுண்டம போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவான அர்ச்சுணனை தேடி வந்த நிலையில் நேற்று மதியம் அவரை ஏரலில் வைதது மடக்கி பிடித்தனர். மனைவியிடம் பறித்த தாலியை அவர் ஏரலில் அடகு வைக்க வந்தபோது போலீசார் பிடியில் சிக்கினார்.
போலீஸ் விசாரணையில் மனைவியை கொலைசெய்தது ஏன் என பரபரப்பு வாக்குமூலம் அளி்த்துள்ளார். எனக்கு 6 மகள்கள், 3 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. மகன்கள் இருவரும் தனித்தனியாக வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.
எனக்கு குடிப்பழக்கம் இருந்தது. எனக்கு மகன்கள் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் அனுப்பினர். எனது குடிப்பழக்கத்தால் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதனால் அவள் எங்களுககு சொந்தமான இன்னொரு வீட்டில் தனியாக வசித்துவருகிறாள்.
எனக்கு சாப்பாடு தர மறுத்ததால் நான் ஹோட்டலில் சாப்பிட்டேன். இதனால் பணம் அதிகமாக செலவானது. குடிப்பழக்கம் வேறு இருந்ததால் பணத்தட்டுபாடு ஏற்படும்போதெல்லாம் மனைவியிடம் சென்று பணம் கேட்பேன். இந்நிலையில் எனக்கு அனுப்பி வந்த பணத்தை மகன்கள் கடந்த 3 மாதமாக நிறுததி விட்டனர்.
எனது மனைவி சொல்லிதான் அவர்கள் நிறுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்தனர். அவளிடம் தாலியை தரும்படி கேட்டேன். ஆனால் அவள் உயிரே போனாலும் தாலியைதரமாட்டேன் என்று கூறிவிட்டாள். எனவே அரிவாளால் வெட்டி கொன்று விட்டு தாலியுடன் வெளியில் வந்தேன். அதை அடகு வைக்க முயன்றபோது என்னை போலீசார் பிடித்து விட்டனர் என்று அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications