For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது!

By Chakra
Google Oneindia Tamil News

More petrol, diesel price hikes on the horizon
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதையடுத்து பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரவுள்ளது.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 1ம் உயர்த்த முடிவு செய்துள்ளன.

இந்த விலை உயர்வு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது.

டீசல் விலையை மாதாமாதம் 50 பைசா உயர்த்த மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. அத்தோடு இந்த 1 ரூபாய் விலை உயர்வும் இருக்குமா அல்லது 50 பைசா மட்டுமே உயருமா என்பது தெரியவில்லை.

டீசல் விலை உயர்வு அத்தியவாசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கும், எரிபொருள் பணவீக்கத்திற்கும் வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனையால் மத்திய அரசுக்கு 1 ரூபாயும், ஒரு லிட்டர் டீசல் விற்பனையால் 11 ரூபாயும், 14.2 கிலோ எடையுள்ள ஒரு கேஸ் சிலிண்டர் விற்பனையால் ரூ.400ம் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

வரும் 2014-2015ம் ஆண்டில் டீசல் மீதான மானியம் ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The economists and energy sector professionals are warning motorists to brace for even more shocks at the petrol and diesel pumps.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X