கொல்கத்தா கல்லூரியில் மாணவர்களிடையே மோதல், வன்முறை, துப்பாக்கிச்சூடு: எஸ்.ஐ. பலி
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள கல்லூரி ஒன்றில் இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில் ஒரு எஸ்.ஐ. துப்பாக்கி குண்டு பாய்ந்து பலியானார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிமோகன் கோஷ் கல்லூரியில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவிருக்கிறது. இதையடுத்து கல்லூரி தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள மாணவர்கள் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்யவிருந்தனர். மனு தாக்கலின்போது காங்கிரஸின் மாணவர் அணியான சத்ர பரிஷத் மற்றும் ஆளும் திரிணாமூல் காங்கிரஸின் மாணவர் அணியான திரிணாமூல் சத்ர பரிஷத் உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறப்பு பிரிவு எஸ்.ஐ. தபஷ் சவுத்ரி என்பவர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமைடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
முன்னதாக நேற்று இரவு இதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குண்டு வெடித்ததில் திரிணாமூல் காங்கிரஸ் கவுன்சிலரின் மகன் உள்பட 3 பேர் காயம் அடைந்தனர். அந்த வீட்டில் வைத்து குண்டு தயாரித்தபோது தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுகளை கல்லூரி தேர்தலின்போது பயன்படுத்த திட்டமிட்டு தயாரித்திருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications