'ஆன் டூட்டி'யில் தூங்கிய திருடன்... போலீஸ் வந்து எழுப்பி கைது செய்தது!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலம் மடவூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். துபாயில் பணிபுரி்ந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீஜா. கணவர் துபாயில் இருப்பதால், ஸ்ரீஜா மட்டுமே தனியாக இருந்துள்ளார்.
சில நாட்களில் ஸ்ரீஜா இரவில் தூங்குவதற்கு அருகில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்று விடுவார். இதை அப்பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் நோட்டமிட்டு வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஸ்ரீஜா உறவினர் வீட்டு்க்கு தூங்க சென்றார். இதைக் கவனித்த திருடன் நள்ளிரவில் வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்தான். வீட்டில் யாரும் இல்லை என்பதால் மெதுவாக திருடி விட்டு செல்லலாம், இப்போது என்ன அவசரம் என கருதி மெத்தனமாக வீட்டுக்குள் சுற்றித் திரிந்துள்ளான். அப்போது அசதியில் தூக்கம் வந்துள்ளது.
எனவே அப்படியே படுக்கையில் படுத்துத் தூக்கம் போட்டுள்ளான். கும்பகர்ண தூக்கமாக மாறியது. ஆழ்ந்த நித்திரைக்குப் போய் விட்டான். விடிந்தது கூட தெரியவில்லை. இந்தநிலையில் காலையில் வீட்டுக்கு வந்த ஸ்ரீஜா படுக்கை அறையில் ஒரு வாலிபர் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைநதார்.
சுதாரித்து கொண்ட அவர் மெதுவாக வீட்டை பூட்டி விட்டு வெளியே வந்து பல்லிக்கல் போலீசுக்கும், பக்கத்து வீட்டினருக்கும் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து வீட்டில் சொகுசாக தூங்கி கொண்டிருந்த வாலிபரை தட்டி எழுப்பி விசாரித்தனர். அதில் அவர் மடவூர் பல்லிக்கல் பகுதியை சேர்ந்த ஸ்ரீஜித் என்பது தெரிய வந்தது. ஓட்டை பிரித்து வீட்டுக்குள் புகுந்து திருட வந்ததாகவும், பல நாள் தூங்காமல் இருந்ததால் அசதியில் தூங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் ஸ்ரீஜித்தை ஆற்றின்கால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலிலில் வைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications