இலவச பொருள் வழங்க கோரி அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இலவசப் பொருட்கள் வழங்கக் கோரி அமைச்சர் செந்தூர்பாண்டியனை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி 22வது வார்டுக்கு உட்பட்ட குரூஸ்புரம் பகுதியில் தமிழக அரசின் இலவச பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்து 200க்கும் மேற்பட்டோருக்கு கிரைண்டர் மின் விசிறி, மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.
விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சின்னத்துரை, அதி்முகவினர், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் விழா முடிவடைந்து அமைச்சர் செல்ல முயன்றார். அப்போது பொதுமக்கள் திடீரென அமைச்சரை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தங்கள் பகுதியில் 598 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் 290 பேருக்கு மட்டுமே பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்று அவர்கள் முறையிட்டனர்.
இதையடுத்து அமைச்சர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். விடுபட்ட அனைவருக்கும் விரைவில் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications