2 பெண்கள் கொடூரக் கொலை.. விசாரணை நடத்தாமல் ஈகோ மோதலில் குதித்த போலீஸ், உளவுத்துறை
நெல்லை: நெல்லையில் 2 பெண்கள் அடுத்தடுத்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், முறையாக விசாரணை நடத்தாமல், சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தினரும், உளவுப் பிரிவினரும் ஈகோ மோதலில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நெல்லை பெருமாள்புரத்திலுள்ள திருநகரில் கடந்த 13ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ராஜம்மாள் என்பவர் மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார். இதுபோல பெருமாள்புரம் அன்புநகர் அருகேயுள்ள ராம்நகரை சேர்ந்த இசக்கியம்மாளை மர்ம நபர் கொலை செய்தார்.
இவ்விரு கொலைகளும் ஓரே கோணத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் இதை துரிதமாக விசாரித்து குற்றவாளியைப் பிடிக்கும் நடவடிக்கையை எடுக்காமல் போலீஸாரும், உளவுப் பிரிவினரும் யார் பெரியவர் என்ற மோதலில் குதித்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உளவுத்துறையை சேர்ந்த போலீஸார், சட்டம் ஒழுங்கு போலீசார், மற்றும் தனிப்பிரிவு போலீசார் இடையே தகவல் தொடர்பு சரியான முறையில் இல்லை. மேலும் ஒரு பிரிவு போலீசார் மற்ற பிரிவு போலீசாரிடம் தகவல் கேட்டால் பாதி தெரிவித்தும் மீதியை மறைத்தும் வருகின்றனர். மேலும் சரிவர தகவல்களும்ம் கூறுவது இல்லையாம்.
தாங்கள்தான் பெரியவர் என்று மேலதிகாரிகளிடம் காட்டிக் கொள்வதற்காக இந்த ஈகோ மோதலில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications