ப.சிதம்பரம் எங்கே போட்டியிட்டாலும் ஜெயிக்க விடமாட்டோம்: சீமான் ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மறைந்த சுபா. முத்துக்குமாரின் நினைவிடத்தில் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நடைபெற்றது. இதற்கு வருகை தந்த சீமான் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:
கர்நாடகாவில் ஆதரவு
"அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதால் வெறுப்படைந்த ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களைய சமாதானப்படுத்தவும், காங்கிரஸ் கட்சிக்கு பலவீனமாக உள்ள கர்நாடகாவில் ஆதரவு திரட்டவேண்டும் என்பதற்காகத்தான் வீரப்பன், ராஜீவ் காந்தி ஆகியோர் கொலை வழக்கில் சேர்க்கப்பட்டோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற உள்ளார்கள்.
ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானவர்கள் இந்திய நாடாளுமன்றத்தில் உறுப்பினராகவும், அமைச்சராவும் இருக்கிறார்கள் என்பது அக் கட்சியினருக்கே தெரியும். இதை திருச்சி வேலுச்சாமி எழுதிய புத்தகம் நன்றாக விளக்குகிறது.
தமிழர்களுக்கு ஆதரவாக வாய்திறந்தாலே எங்கள்மீது தடைபோடும் காங்கிரஸ் கட்சியினர் ஏன் இதுவரை புத்தகத்துக்கு தடைவிதிக்கவில்லை?
தலைமை சரியில்லை
எல்லா கட்சியினருமே 40 நாடாளுமன்ற தொகுதியும் எங்களுக்குத்தான் என்கிறார்கள். எத்தனை நாடாளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்தியா சரியான பாதையில் போகாது. இந்த நாட்டை, இந்த மக்களை நேசிக்கிற தலைமை இங்கு இல்லை.
தமிழினத்தின் விடுதலை இந்தியா மட்டுமின்றி, எந்த நாட்டையும் நம்பி இல்லை. நாங்களே ஏற்படுத்திக்கொள்வோம்.
தமிழகஅரசின் முழு திட்டங்களும், மின் பிரச்னையால் மறைக்கப்படுகிறது. மின் பிரச்னையும் படிப்படியாக குறைய வாய்ப்பு உள்ளது.
மதுவிலக்கு அமல்படுத்துக
குஜராத்தில் மதுவிலக்கு, தடையற்ற மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களால் அம்மாநில முதல்வர் பாராட்டப்படுவதன் பின்னணி அவர் அந்த மண்ணின் மைந்தர், கேரளாவிலும் மதுக்கடைகளுக்கு வரையறை உள்ளது. ஆனால், தமிழகத்தில்தான் விடியவிடிய வியாபாரம் நடக்கிறது. தெருவுக்கு 2 மதுக்கடைகளை திறந்து வைத்துவிட்டு சட்டம் ஒழுங்கு பாதுக்காக்கப்படும் என்று கூறுவது தவறானது.
சிதம்பரத்தை ஜெயிக்க விடமாட்டோம்
தமிழினத்துக்கு எதிராகவுள்ள காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், மத்திய மந்திரியாகவும் உள்ள சிதம்பரம் தமிழகத்தைவிட்டு புதுச்சேரி என வேறு எங்கு போட்டியிட்டாலும் அவரையும், அக்கட்சியைச் சேர்ந்தோரையும் தோற்கடிப்போம் இவ்வாறு சீமான் பேசினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications