சவூதி வரலாற்றில் முதல்முறையாக... 'ஷுரா' ஆலோசனை குழு உறுப்பினர்களாக 30 பெண்கள் பதிவேயற்பு
சவூதி: சவூதி அரேபியாவில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்கும் ஷுரா குழுவில் முதல்முறையாக 30 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். 30 பெண்கள் உள்பட 150 பேர் கொண்ட ஷுரா குழு நேற்று மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.
சவூதி அரேபியா ஷரியத் சட்டங்களை கடுமையாக பின்பற்றும் நாடு. இந்நிலையில் அந்நாட்டை ஆட்சி செய்யும் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் ஆட்சி முறையில் சில திருத்தங்களை கொண்டு வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2005ம் ஆண்டு சவூதி வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. ஆனால் அதில் வாக்களிக்க பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெண்களும் வாக்களிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டது. மேலும் வரும் 2015ம் ஆண்டு நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் போட்டியிடவும் மன்னர் அனுமதி அளித்துள்ளார்.
சவூதியில் மன்னரின் ஆட்சி முறை குறித்து ஆலோசனை வழங்க 150 உறுப்பினர்களைக் கொண்ட ஷுரா குழு உள்ளது. இந்த குழுவில் இதுவரை பெண்கள் இடம்பெற்றதே இல்லை. இந்நிலையில் இக்குழுவில் பெண்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதையடுத்து இக்குழுவில் 30 பெண்கள் சேர்க்கப்பட்டனர்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஷுரா குழுவினர் நேற்று மன்னர் முன்பு பதவியேற்றுக் கொண்டனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications