ராஜிவ் வழக்கில் தூக்கை நிறைவேற்றக் கூடாது: தூக்கு விதித்த நீதிபதி கருத்து

ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகித்தவர் கே.டி. தாமஸ். இருப்பினும் நளினி பெண் என்பதால் தூக்கு கூடாது என்றும் கருத்து தெரிவித்திருந்தார் தாமஸ். பின்னர் நளினிக்கு ராஜிவின் மனைவி சோனியா கருணை காட்டியதால் ஆயுள் தண்டனையானது. மற்ற மூன்று தமிழரும் தூக்கு மேடையில் நிற்கின்றனர்.
இந்த நிலையில் தூக்கு விதித்து தீர்ப்பளித்த நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், ராஜிவ் வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட மூவருமே 22 ஆண்டுகள் சிறையில் கழித்துவிட்டனர். அவர்கள் ஆயுள் தண்டனைக் காலத்தைவிட கூடுதலான காலத்தை சிறையில் கழித்திருக்கின்றனர். இதனால் ஒரே குற்றத்துக்காக ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என இருவித தண்டனை விதிக்க முடியாது.
அவர்கள் தங்களை தூக்கிலிடக் கூடாது என்று கோருவதற்கு அரசியல் சாசனத்தில் இடமிருக்கிறது. இதனால் மூவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஏற்கெனவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான வி.ஆர். கிருஷ்ணய்யர், தூக்கு தண்டனையை இந்தியாவில் இருந்து அறவே ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். அவர் மூன்று தமிழரையும் தூக்கிலிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் மற்றொரு ஓய்வு பெற்ற நீதிபதியான கே.டி. தாமஸும் அதுவும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதியே தூக்கு கூடாது என்று கூறியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications