கோழி, நாய் ரத்தம் குடித்த பெண்ணுக்கு டிசோசியேஷன் நோய்: கோவை மருத்துவர்கள்
கோவை: நாய், கோழிகளைக் கொன்று ரத்தம் குடித்த பெண் "டிசோசியேஷன்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் வசித்து வரும் சங்கர் தனது மனைவி இரவு நேரத்தில் பச்சை ரத்தம் குடிப்பதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். இந்த பெண் டிசோசியன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உள்மனதில் பிரச்னையை அடக்கி வைத்திருந்தால் இந்த பாதிப்பு இருக்கும். கணவரின் கொடூர செயல், குடித்துவிட்டு வந்து அடிப்பது போன்ற பிரச்னைகளை வெளியே சொல்லாமல் உள்மனதில் வைத்து கொண்டால் பயங்கர கோபம் வெளிப்படும்.
இதையும் டிசோசியேஷன் என்பார்கள். இந்த பாதிப்பு இருந்தால் தூக்கமின்மை, தனக்கு தானே சிரிப்பது, காதில் யாராவது பேசுவது போல் தோன்றும். குடும்பத்தில் யாருக்காவது இந் நோய் பாதிப்பு இருக்கிறதா என்பது குறித்து கணவரிடம் விசாரிக்க வேண்டும். அதன்பிறகு தான் சிகிச்சை அளிக்க முடியும். டிசோசியேஷனை கிராமங்களில் ரத்தக் காட்டேரி, பேய் ஆட்டம் என்பார்கள் என்று விளக்கம் கூறினார் மருத்துவர்.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர் தனது மனைவி பிரபா இரு குழந்தைகளுடன் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு கோவை வந்தனர்.
மணியகாரம்பாளையம் அருகே அன்பு நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பிரபா கடந்த சில நாட்களாக விரக்தியான மனநிலையில் இருந்ததாக தெரிகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும், தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்தும், கழுத்தை நெரித்தும் கொல்ல முயன்றுள்ளார். கடந்த சனிக்கிழமை தெருவில் சென்ற ஒரு நாயை பிடித்து கொன்று ரத்தத்தை குடித்துள்ளார் பிரபா.
பயந்துபோன சங்கர், அவரை பொள்ளாச்சியில் வைத்தியரிடம் அழைத்து சென்றார். அங்கும் திடீரென ஆவேசம் அடைந்த பிரபா, ரோட்டில் சென்ற நாயை பிடித்து கொன்று ரத்தத்தை குடித்துள்ளார். தொடர்ந்து 7 கோழிகளை கொன்று ரத்தம் குடித்துள்ளார்.
பெண் ரத்தம் குடிக்கும் தகவல் பரவியதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. பிரபாவை மீண்டும் கோவைக்கு அழைத்து வந்த ராம், அவரை ஜி.ஹெச்.சில் சேர்த்தார். அங்கு மனநல காப்பக வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications