மதுவை ஒழிக்க தன்னலமின்றி பாடுபடுகிறார் வைகோ: குமரி அனந்தன் வாழ்த்து

பூரண மது விலக்கு கோரி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிரச்சார நடைபயணம் மேற்கொண்டு வரும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவை குமரி அனந்தன் இன்று சந்தித்து பேசினார்.
இது குறித்து ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
'தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், மதுக்கடைகளை நிரந்தரமாக மூடவும் உறுதியோடும், எதற்கும் அஞ்சாத நெஞ்சோடும் அறப்போராக நடந்து வருகின்ற வைகோவிற்கும், உடன் வருகின்ற சகோதரர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளைக் கூறுகிறேன். மதுவின் கொடுமையால் தமிழகம் பாழாகின்றது. இதிலிருந்து தமிழகத்தை மீட்க தூய்மையான நோக்கத்தோடு தன்னலமின்றி வைகோ போராடுகிறார்.
தேசப்பிதா காந்தி, உலகப்பொதுமறை தந்த திருவள்ளுவர், பெருந்தலைவர் காமராஜர் வாழ்த்துகிறார். அண்ணா வாழ்த்துகிறார். வறுமையில் வாடும் ஏழைத் தாய்மார்கள் வாழ்த்துகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தமிழக மக்களின் நல் ஆதரவை வேண்டுகிறேன். மதுவை ஒழிக்கும் அறப்போரில் வைகோ வெல்வது நிச்சயம்' என்று குமரி ஆனந்தன் கூறினார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications