ரயில்வே பட்ஜெட்டில் தென் மாவட்டங்கள் புறக்கணிப்பு

தென் மாவட்டங்கள் தொடர்ந்து ரயில்வேயால் புறக்கணிக்க பட்டு வருகிறது. கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பாஞ்சர், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஓராண்டு ஆகியும் இயக்கப்படாததால் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தென்னக ரயில்வேயில் அதிக வருமானத்தை அள்ளி கொடுக்கும் மாவட்டங்கள் பட்டியலில் தமிழகத்தில் தென் மாவட்டங்களான நெல்லை,விருதுநகர்,தூத்துக்குடி,கன்னியாகுமரி,ஆகிய 4 தென்மாவட்டங்கள் தான்.
சிதம்பரம், வாசன் மாவட்டங்கள்
மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில் எதிர்பார்த்த எந்த அறிவிப்புக்களும் தென் மாவட்டத்திற்கு அறவே இல்லை, மாறாக மத்திய அரசில் முக்கிய அமைச்சர்களாக இருக்கும் சிதம்பரம்,வாசன் ஆகியோரின் தொகுதிகளை மையம் வைத்து புதிய ரயில்கள் அறிவிக்க பட்டுள்ளதாக மாநில நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் கே.மணி.
பாசஞ்சர் ரயில் தேவை
நெல்லை - செங்கோட்டை வழித்தடத்தில் தற்போது 2 முறை அப், 2 முறை டவுன் முறையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. கடந்த பட்ஜெட்டில் இந்த வழித்தடத்தில் 4 முறை அப், டவுன் முறையில் பாசஞ்சர் ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி தற்போது இயக்கப்படும் 2 முறைகள் தவிர காலை 6.45 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு 9.45 மணிக்கு செங்கோட்டை செல்லும் வகையிலும், அங்கிருந்து 11 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு மதியம் 1.15 மணிக்கு வரும்படியும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பாலகிருஷ்ணன்.
இதேபோல் நெல்லையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு செங்கோட்டை செல்லும்படியும், செங்கோட்டையில் 6 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.15 மணிக்கு வரும்படியும் பாசஞ்சர் ரயில் இயக்கப்பட வேண்டும்.
மாணவர்கள், வர்த்தகர்கள் பாதிப்பு
பட்ஜெட்டில் அறிவித்தபடி கூடுதலாக 2 முறைகள் பாசஞ்சர் இயக்கப்படாததால் சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி பகுதிகளில் இருந்து தினமும் நெல்லைக்கு வந்து செல்லும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் அவதிப்படுகின்றனர் என்கிறார் பாலகிருஷ்ணன்.
அறிவிக்கப்பட்ட ரயில்கள் காணோம்
கன்னியாகுமரி - நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் இனிமேல் வாரம் 2 முறைகள் இயக்கப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. எனினும் வாரம் 2 முறை இந்த ரயில் இயக்கப்படவில்லை.
நெல்லையில் இருந்து கோயம்புத்தூர், கொங்கன் ரயில்வே வழியே இயக்கப்படும் தாதர் எக்ஸ்பிரஸ் குறித்தும் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. ஒரு மாதம் மட்டும் இந்த ரயில் இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்டது. இந்த ரயில் இயக்கப்பட்டால் மும்பைக்கு பயண நேரம் குறையும் என கூறப்படுகிறது. மும்பையில் வசிக்கும் நெல்லை மக்களுக்கு இந்த ரயில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்கிறார் வழக்கறிஞர் ஆ. வெங்கடேசன்.
அவசரகோல அறிவிப்பு
செங்கோட்டையில் இருந்து ஈரோடு,சென்னைக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு வருமென்று நினைத்தவர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது.லல்லு பிரசாத் யாதவ் அமைச்சராக இருக்கும் போது அப்போதைய பட்ஜெட்டில் செங்கோட்டை-கோவை பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று அறிவித்தார்.அனால் அந்த அறிவிப்பும் இதுவரை அமல் படுத்த வில்லை.அவசரக் கோலத்தில் அறிவிக்கும் ரயில்வே அதனை முறையாக செயல் படுத்த முடியாமல் திணறிவருகிறது.
தமிழக எம்.பிக்கள் கேட்பார்களா?
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி புதிய ரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகத்தை அழுத்தமாக வலியுறுத்தி காரியத்தை சாதிக்க தென் மாவட்ட எம்.பி.க்கள்எந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் மக்கள் மத்தியில் குமுறல்கள் வருகிறது . எதற்கெல்லாமோ போராடும் கட்சிகள், அமைப்புகளும் இதில் கவனம் செலுத்தவில்லை. அறிவிக்கப்பட்டபடி ரயில்கள் இயக்கப்படாமல் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மக்களின் நிலைதான் அதோ கதியாக உள்ளது. இதனால் ரயில்வே துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஏமாற்றம் தந்த பட்ஜெட்
நாகர்கோவில் - பெங்களூரூ வாராந்திர ரயிலை தினசரி ரயிலாக இயக்குவது, திருச்சி - நெல்லை இன்டர்சிட்டி ரயிலை திருவனந்தபுரம் வரை நீட்டிப்பது, திருவனந்தபுரம் - மங்களூரூ இரவு நேர ரயிலை கன்னியாகுமரி வரை நீட்டிப்பது,செங்கோட்டை-சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும் ,நெல்லையை மையமாக வைத்து தனி ரயில்வே கோட்டம் அமைக்கவேண்டும், என பல்வேறு கோரிக்கைகளை வைத்து எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ரயில்வே பட்ஜெட்டில் ஏமாற்றமே மிஞ்சியது. எனவே நெல்லை,தென்காசி,விருதுநகர்,நாகர்கோவில்,தூத்துக்குடி, ஆகிய 5 மக்களவை எம்.பி தொகுதியில் வசிக்கும் மக்கள் ஏமாற்றத்தை அள்ளி வழங்கியவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முடிவில் உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications