கேரளாவில் 15 வயது மாணவியை கொலை செய்த 2 பேருக்கு தூக்கு
வயநாடு: கேரளாவில் 15 வயது சிறுமியை நகைக்காக கொலை செய்த இரண்டு பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது
கேரள மாநிலம் வயநாடு கல்பட்டாவை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி அனிதா பள்ளிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த நாகர், கபீர் என்ற 2 வாலிபர்கள் மாணவி அனிதாவை கடத்தி சென்று கொலை செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் கல்பட்டா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவி அனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கல்பட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், நாசர், கபீர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இக்கொலை வழக்கில் 2 வருடங்களாக விசாரணை நடைபெற்று வந்தது. புதன்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 2 பேரும் செய்த தவறு மிகவும் கொடூரமானது. நகைக்காக இளம்பெண்ணை கொலை செய்தது மன்னிக்க முடியாத ஒன்று. இவர்களால் இந்த நாட்டிற்கு ஆபத்து இதனால் 2 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கிறேன் என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார். இவ்வழக்கின் தீர்ப்பு என்பதால் எராளமான போலீசார் நீதிமன்ற வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications