ஐ.ஆர்.சி.டி,சிக்கு ரூ.10 லட்சம் அபராதம்!: குளிர்பானத்தை அதிகவிலைக்கு விற்றதாக புகார்
டெல்லி: எம்.ஆர்.பி விலையை விட குளிர் பானங்களை அதிக விலைக்கு விற்றதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திற்கு டெல்லியின் மாவட்ட நுகர்வோர் குறை தீர்ப்பு மன்றம் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரயில் நிலைங்களில் குளிர்பானத்தின் அதிக பட்ச விலையான 12 ரூபாயை விட 3 ரூபாய் கூடுதலாக வைத்து விற்பனை செய்ததை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த சச்சின் திமன், சரண்யா ஆகியோர் நுகர்வோர் மன்றத்திடம் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார் மனுவை விசாரித்த குறைதீர்ப்பு மன்றம் அளித்த தீர்ப்பில்,"பல ஆயிரம் பயணிகளுக்கு உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு அரசு நிறுவனம் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதாகவே இந்த மன்றம் பார்க்கிறது.
பயணத்தின் காரணமாக எதிர்ப்பு தெரிவிக்க இயலாத பயணிகளை, சேவைகளைப் பெற அதிக விலைக்கு வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று கட்டாயப்படுத்துகிறது.
அரசின் ஒரு சேவை கழகமாக இருந்துகொண்டு தனியார் விற்பனையாளர்கள் போல நடந்து கொள்ளக் கூடாது. 24 மணி நேரமும் ஆண்டு முழுவதும் செயல்படும் ரயில்வே அதிக விலை வைத்து விற்பதால் அதற்கு கிடைக்கும் லாபத்தை மனதில் கொண்டு இந்தத் தீர்ப்பை நாங்கள் வழங்கியுள்ளோம்.
இந்தக் கழகம் 10 லட்சம் ரூபாயை டெல்லி மாநில சட்ட சேவைகள் ஆணையத்திடம் சேர்க்க வேண்டும். இந்த இரு மனுதாரர்களின் வழக்கு செலவுக்காக அவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்."என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications